உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கடந்த கால சம்பவங்களில் பாடம் கற்காத விஜய்: கறுப்பு தினமாக மாறிய கரூர் பயணம்

கடந்த கால சம்பவங்களில் பாடம் கற்காத விஜய்: கறுப்பு தினமாக மாறிய கரூர் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: திரைத்துறையின் உச்சத்தில் இருந்து அதை விட்டு, விட்டு அரசியலுக்கு வருகிறேன் என்று, கட்சியின் துவக்கத்தில் தெரிவித்தார் விஜய். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆர். காலத்தோடு போய் விட்டது என்றெல்லாம், பேச்சுகள் எழுந்தன. சளைக்காமல் வந்த விஜய், தான் போகும் இடங்களில் எல்லாம் தன் பலத்தை காண்பித்து வருகிறார். ஆனால், அந்த கூட்டம்தான் இன்று அவருக்கே வினையாக முடிந்திருக்கிறது. முண்டியடித்து வரும் கூட்டம், விஜய்யை நேரடியாக பார்க்கத் தான் வருகிறது; அவரின் பேச்சை கேட்க அல்ல என்று தெரிகிறது. கோவையில் தீ விபத்து இது, முதன் முதலில் தென்பட்டது கோவையில். த.வெ.க. சார்பில், முதல் பூத் கமிட்டி கூட்டம், கோவையில் நடந்தபோதே, தள்ளுமுள்ளு துவங்கி விட்டது. போலீசார் போதிய ஏற்பாடுகள் செய்திருந்தாலும், கல்லுாரியின் நுழைவு வாயில் கேட்டை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த ரசிகர்களால், களேபரம் ஏற்பட்டது. அரங்குக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஏ.சி., பெட்டியில் ஏறிய ரசிகர்களால் சிறு தீ விபத்து ஏற்பட்டது. கல்லுாரியில் இருந்த ஊழியர்கள், உடனடியாக தீயை அணைத்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிலும், பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளோடு வந்திருந்தனர். இதுபோன்ற கூட்டங்களுக்கு குழந்தையை அழைத்து வரலாமா என்று நிருபர்கள், அப்பெண்ணிடம் கேள்வி எழுப்பிய போது, எனக்கு விஜய் முக்கியம்' என்றார். பிறகு சுதாரித்துக் கொண்டு, குழந்தையும் முக்கியம்' என்றார். மதுரையில் மயக்கம் மதுரையில் கூட்டம் நடத்திய போது, வெயிலில் காய்ந்த தொண்டர்கள் பலர் மயக்கமடைந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த இளைஞர் பலியானதற்கு பின்பும் யோசித்திருக்க வேண்டும்; யோசிக்கவில்லை. 'தொண்டர்கள் கண்ணியத்தோடு நடக்க வேண்டும்' என்று விஜய் சொன்ன பிறகும், யாரும் கேட்பதாக இல்லை. கட்சி ஆரம்பித்து ஒரு தேர்தலை சந்திப்பதற்குள், விஜய்க்கும், த.வெ.க.கட்சிக்கும் கரூர் சம்பவம் ஒரு கரும்புள்ளி. கரூரில் தங்காதது ஏன்? பிரசாரத்துக்கு வந்தவர்கள் உயிரிழந்ததை அறிந்தபிறகும் கரூரில் இருந்து அவர் சென்னை சென்றது ஏன், கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்தோர் உறவினருக்கு ஆறுதல் கூறியிருக்க வேண்டாமா, அல்லது இரண்டாம் கட்ட நிர்வாகிகளையாவது அனுப்பி வைத்திருக்க வேண்டாமா என்ற கேள்விகளும் எழுகின்றன. இனி, அவரது தொடர் பிரசார கூட்டம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. மறுபடியும் இதுபோல் ஒரு துயர சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, விஜய்க்கும் உண்டு என்பதே பலரது வலியுறுத்தலாகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Subburamu K
செப் 29, 2025 18:51

Learning lessons by Joseph Vijay is not important Why Tamil nadu idiotic parents taking their kids and small girls to such crowded places. First of all irresponsible parents must change their behavior


Mr Krish Tamilnadu
செப் 29, 2025 14:59

விஜய் கரூரில் கற்று கொண்ட பாடத்திற்கான விலை 10 கோடி. பொதுவாழ்வில் நெளிவு சுளிவுகளை நிச்சயம் கற்று கொள்ள வேண்டும். அனைத்து விசயங்களிலும் அவரின் நேரடி பார்வையை ஒரு முறையாவது பதிக்க வேண்டும். பிறரை நம்புவதை விட, தனது அறிவை முழுமையாக பயன்படுத்த வேண்டும். கூட்டம் நடக்கும் இடங்களை இவரும் ஒருமுறை வீடியோ பதிவில் பார்த்து இருக்க வேண்டும். தனது பயண திட்டங்களின் அதிக படியான கூட்டத்தை சமாளிக்க கமிஷனரை சந்தித்து, ஆலோசித்து உதவி கேட்டு இருக்க வேண்டும். எஸ்கட் போலீஸ் போன்ற ஏற்பாட்டை செய்து இருக்க வேண்டும். குரங்கு சேட்டை, பைக் ரேஸ் நபர்களை காணொளி வாயிலாக வன்மையாக கண்டித்து இருக்க வேண்டும். சினிமாவில் டைரக்டர் ரை நம்பலாம். அங்கு தயாரிப்பாளர் முதலாளி. அங்கு நாம் சொன்ன வேலையை மட்டும் செய்யலாம். ஆனால் மக்கள் நலனை விரும்பு நாம் தான் ஒவ்வொரு விசயத்தையும் ஒருமுறையாவது கவனிக்க வேண்டும். வரும்போதே விபத்து. மீட்டிங்கிலும் உங்க பேச்சிலேயே கூட்டம் உங்களுக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிந்தது. தம்பிகளை நம்பி சென்று விட்டீர்கள். அருகிலுள்ளவர்கள் பத்திரமாக சென்று விடுவார்கள் என நினைத்து விட்டீர்கள். அமைதியாக கலைந்து செல்ல வழி நடத்தி இருக்கலாம். பத்திரிகையாளர் சந்திப்பு இது போன்ற சமயங்களில் நிச்சயம் எதிர் கொள்ள வேண்டும். சாமர்த்தியமாக ரெடிமேட் பதில்களை கூறி இருக்க வேண்டும். அங்கு நிலவரம் கேட்டு அறிந்து கொண்டு இருக்கிறேன். நிலைமை நார்மல் ஆகும்வரை கட்சி அங்கு துணை நிற்கும் என்பது போன்ற பதில்களை. விஜயகாந்த், கமல் போன்றவர்கள் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் கோப முகத்தை காட்டி அவப்பெயர் பெற்றதை மனதில் வைத்து, கோபம் காட்டாமல் தங்கள் பயணிக்கலாம். பொது வாழ்வில் அனைத்தையும் ஏற்று கொள்ள வேண்டும். நிலைமையை சமாளிக்க தெரிய வேண்டும். வாலி யை ராமர் வதம் செய்தது போல், ஒரு சில விசயங்கள் ஒரு சில கோணங்களில் சரி.


sasidharan
செப் 29, 2025 14:43

கூத்தாடிகள் பின்னால் போனால் என்ன கதி என்பதை இனிமேலாவது மக்கள் சிந்திக்க வேண்டும். போனது அப்பாவி உயிர்கள், ஆனால் அவர் அடுத்த கூட்டம் போட தயார் ஆகி விடுவார். அப்போதும் மக்கள் வாயை பிளந்துகொண்டு பார்க்க கிளம்பிவிடுவார்கள்.


angbu ganesh
செப் 29, 2025 15:40

சும்மா கூத்தாடிகள் கூத்தடிகள்னு சொல்லாதீங்க சார் அவங்களும் மனுஷங்கதான் வரி காட்டறாங்க ஆனா இதில் விஜய் ஒரு தவறான வழி நடத்துதலால் அரசியலுக்கு வந்திருக்கார் சினிமாவும் அரசியலும் ஒண்ணு இல்ல, அது வெறும் 3 மணி நேர படம் ஆனா அரசியல் 24 மணி நேர வாழ்க்கை என்னமோ மேடைல சும்மா யாரோ எழுதி கொடுத்துட்டு அத படிச்சிட்டு கை தட்டு வாங்கிட்டு முதல்வர் ஆகிடலாம்னு விஜய் நெனச்சிட்டார் இவரை வச்சு எல்லாரையும் கூத்தாடிங்கன்னு சொல்லாதீங்க அதும் ஒரு தொழில் ஓகே உலகம் இருக்கே சார்


M Ramachandran
செப் 29, 2025 12:44

புஸ் புஸ் ஆனந் பலி கடா.


KRISHNAN R
செப் 29, 2025 12:21

இது புதிய பாட்டிலில் உள்ள பழைய கள்.... நம்பினா மக்கள் டுமீல் என்பது தான்


Rajarajan
செப் 29, 2025 12:13

என்னது, திரும்பவும் மொதல்ல இருந்தா ?? விளங்கிரும்.


பாலாஜி
செப் 29, 2025 10:35

சுய அறிவு எப்போதும் விஜய்க்கு இல்லை என பல தடவை நிரூபித்திரூக்கிறார். புஸ்ஸியின் வழி ஜோசப் விஜயின் அரசியல் வழி.


S Bala
செப் 29, 2025 10:16

ஒரு சினிமாக்காரனை பார்க்க இத்தனை மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் இந்த கூட்டம் வோட்டு போட்டு அரசை தேர்ந்தெடுக்கிறது என்பதுதான் மிகவும் கவலைக்குரியது. சாதி, சாராயம், சினிமா, காசு இவைதான் அரசியல் என்ற நிலைமை தமிழ்நாட்டுக்கு கேடு.


K.Ravi Chandran, Pudukkottai
செப் 29, 2025 09:04

ஏதோ தன்னை வானில் இருந்து குதித்தவராக விஜய் நினைத்துக் கொள்ளக் கூடாது. கூட்டம் சேர்ப்பதற்காக தொடர்ந்து லேட்டாக போவதுதான் இத்தனை உயிரிழப்பிற்கு முதல் காரணம். புஸ்ஸி, ஆதவ் அர்ஜுனா நிர்மல் குமார் இவர்கள் எல்லாம் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் கோமாளிகள். இனியும் இந்தக் கோமாளிகளை நம்பி பார்ட் டைம் அரசியல் விஜய் செய்தால் கட்சிக்கு சங்குதான்.


Natchimuthu Chithiraisamy
செப் 29, 2025 11:00

மக்கள் தான் அய்யோ பாவம்


Venukopal, S
செப் 29, 2025 08:39

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கையாள தவறிய அரசு கலைக்கப்பட வேண்டும் அடுத்த 3 தேர்தலுக்கு போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும். இப்படுகொலைக்கு குண்டர் சட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை