உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசை கண்டித்த விஜய்க்கு அவரது படம் வாயிலாக பதிலடி

அரசை கண்டித்த விஜய்க்கு அவரது படம் வாயிலாக பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சிகிச்சை அளிக்காத டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில், அரசை கண்டித்த த.வெ.க., தலைவர் விஜய்க்கு, அவரது படக்காட்சிகள் வாயிலாக பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.சென்னை கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை டாக்டர் பாலாஜி, நோயாளி ஒருவரின் மகனால் குத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், 'அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது' என கூறிஉள்ளார். அதற்கு பதிலடி தரும் வகையில், போக்கிரி திரைபடக் காட்சிகளை, ஆளுங்கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், சிகிச்சை அளிக்காத டாக்டரை, பட நாயகனான விஜய் கத்தியால் தாக்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 'நோயாளிக்கு உடனே சிகிச்சை அளிக்காத டாக்டரை, கத்தியால் குத்த கற்றுக் கொடுத்து விட்டு, அரசியலுக்கு வந்த பின், அதை எதிர்ப்பது போல அரசியல் செய்யலாமா' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
நவ 15, 2024 21:25

விஜய் ஒரு கற்றுக்குட்டி அரசியலில். நிறைய கற்கவேண்டும்.


Ms Mahadevan Mahadevan
நவ 15, 2024 15:07

அந்த கால சினிமாவில் சேர்த்த பணத்தை சிக்கணமா அம்மா கையில் கொடுத்துவிடு ஆறை நுறாக்குவங்க என்று சொன்னார்கள். விஜய் மருத்துவரை கத்தியால் குத்தவும் டாடி மம்மி வீட்டில் இல்ல தடைபொட எஸ்டும் இல்லை விளையாடலாம்.... என்று சமுதாயத்தை கெடுதுவிட்டு இப்போ அரசியலில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அம்புடுத்தான்


அசோகன்
நவ 15, 2024 14:09

ரெண்டுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.......


Balasubramanian
நவ 15, 2024 13:59

மூல படத்தில் அது மாதிரி காட்சி வருகிறது, அதை படத்தில் நடித்தார் அதே போல மூல கட்சி கழகங்களை போல எதிர் கட்சியாக இருக்கும் போது ஒரு நியாயம் ஆளுங் கட்சியாக ஆனால் அது மாறிவிடும் என்று சீக்கிரம் கற்றுத் தேர்ந்து விடுவார்


V RAMASWAMY
நவ 15, 2024 13:12

அப்படியானால் மருத்துவர்களை கத்தியால் குத்துவது அரசியலில் சகஜம் என்று நியாயப்படுத்துகிறதா திராவிட மாடல் அரசு?


Saravanan D
நவ 15, 2024 13:06

பிறப்பொக்கும் டாக்டர் உயிர்க்கும் என்று திருவள்ளுவர் கூறவில்லை தவறான சிகிச்சையால் அந்த நபரின் அம்மாவின் உயிருக்கு ஆபத்து என்று அந்த நபரின் குடும்பம் கூறுகின்றது அதை கண்டு கொள்ளாமல் தளபதி இருப்பது ஏன்?


Abdullah
நவ 15, 2024 11:13

இதுக்கு முன்னாடி விஜய் எவ்வளவோ கருத்து சொல்லி இருக்காப்ல 2ஜி பத்தி கொஞ்சம் பேசுவோமா தம்பிகளா கொள்ள அடிக்கிறவன் கொள்ளை அடிச்சுகிட்டு தான் இருக்கான் அதை பத்தி கேட்க வக்கில்லை


Muralidharan S
நவ 15, 2024 10:17

சினிமாவால் நாசமாகி போன தமிழ்நாடும் தமிழ்நாட்டு அரசியலும்.. பொழுதுபோக்கு எது... வாழ்வாதாரம் எது என்று சிந்திக்க இயலாத ஆட்டு மந்தை கூட்டங்கள் இருக்கும் வரை ... முன்னேற வாய்ப்பு இல்லை...


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 15, 2024 11:22

சினிமாவை 12ம் வகுப்பு தமிழ் பாடமாக வைத்துள்ளார்கள் நமது தமிழ் வளர்க்கும் அரசாங்கம். பொழுது போக்கை வாழ்வாதாரமான கல்வியில் சேர்த்து விட்டு இப்போது பொழுது போக்கு எது வாழ்வாதாரம் என்று தெரியாமல் முழிக்கிறான் தமிழன்.


nv
நவ 15, 2024 08:51

இந்த சினிமா தான் தமிழகத்தின் சோகம்


நிக்கோல்தாம்சன்
நவ 15, 2024 08:05

கேள்வி நியாயம்தான், அவரது செய்கையும் நியாயம் தான், அப்போ செயலிழந்த அரசை தான் வோட்டு என்ற கத்தியால் குத்தவேண்டும்


சமீபத்திய செய்தி