உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கைதாகி ஜாமினில் வந்தவர் தானே? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி

கைதாகி ஜாமினில் வந்தவர் தானே? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி சிறப்பு நிருபர்

துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரிய சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசும், துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் 'நமஸ்தே' திட்டத்தை மத்திய அரசும் செயல்படுத்தி வருகின்றன.இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகளை முன் வைத்த 'யு டியூபரா'னசவுக்கு சங்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை' என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'ஏற்கனவே இதே நபர் தானே நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கைதாகி ஜாமினில் வெளி வந்தவர்?' என தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு பதில் அளித்த சவுக்கு சங்கர் தரப்பு, 'அந்த விவகாரங்களில் நாங்கள் பொது மன்னிப்பு கேட்டு விட்டோம்' என பதில் அளித்தனர்.அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 'பலரும் இப்படித்தான் செய்கின்றனர். ஒருவரை பற்றி அபாண்டமாக பேசிவிட்டு, பிறகு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு விடுகின்றனர். இதனால் என்ன பலன் ஏற்படப் போகிறது?' என கேள்வி எழுப்பினார்.பின், சவுக்கு சங்கர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது,தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Aanand Kanthasamy P
ஜூலை 30, 2025 15:45

சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதியின் கேள்விக்கு எழுந்த விமர்சனங்கள் சவுக்கு சங்கர் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எழுப்பிய கேள்வி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதம் எழுந்துள்ளது. "கைதாகி ஜாமினில் வந்தவர் தானே?" என்ற நீதிபதியின் கூற்று, பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருத்து ஊழலை ஆதரிப்பதாகவும், நீதிபதி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துகளைப் பார்க்கும்போது, உச்சநீதிமன்ற நீதிபதியின் இந்தக் கேள்விக்கு ஆதரவாக எந்த ஒரு கருத்தும் இல்லை. மாறாக, பலரும் நீதிபதியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர். "ஊழலை ஆதரிப்பவர்," "மோசமான நபர்" போன்ற கடுமையான சொற்களால் நீதிபதியைக் குறிப்பிட்டிருப்பது, பொதுமக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது. பொதுமக்கள் மத்தியில் நீதித்துறை மீதான நம்பிக்கை மிகவும் முக்கியம். இது போன்ற கருத்துகள் நீதித்துறை மீதான மரியாதையையும், அதன் நடுநிலைமையையும் கேள்விக்குள்ளாக்கலாம். ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதி எழுப்பும் கேள்விகள், சட்டரீதியாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து உங்களுடைய கருத்து என்ன?


Mani . V
ஜூலை 30, 2025 03:55

இது போன்று நம்ம ஐந்து கட்சி அம்மாவாசையிடம் கேட்க திராணி இருக்கா? கேட்க முடியாது. ஏனென்றால் காந்தி கோபித்துக் கொள்வார்.


Sathiesh Chandar
ஜூலை 29, 2025 22:50

முதல்ல இவங்களை ஸ்கூல் பசங்க மாதிரி, கோடை/தசரா/கிருஸ்துமஸ் விடுமுறை எடுக்காமல் வேலை பார்க்க சொல்லுங்க. பிறகு மத்தவங்களை பற்றி கருத்து சொல்லலாம்.


K.Ravi Chandran, Pudukkottai
ஜூலை 29, 2025 21:31

ஏன் கைதாகி ஜாமீனில் வந்த ஒருவர் இதற்கு முன் வழக்கு தொடர்ந்ததே இல்லையா? மூல வழக்கிற்கும் இந்தக் கேள்விக்கும் என்ன சம்மந்தம்?


rama adhavan
ஜூலை 29, 2025 18:19

அப்போ திருடன் திருந்தவே கூடடாதா? வேறொரு திருட்டை பற்றி சொல்லவே கூடாது என்கிறாரா நீதிபதி?


Rajan A
ஜூலை 29, 2025 18:09

ஜாமீன் கொடுத்ததும் நீதிமன்றம் தானே. ஜாமீனில் நிறைய அரசியல் வியாதிகள் உள்ளன. அவர்களிடம் கேட்க முடியுமா?


Ravi Kulasekaran
ஜூலை 29, 2025 14:50

நீதிபதிகள் கடவுள்கள் அல்ல அல்ல அல்ல நீங்கள் தவறே செய்யாத உத்தமர்களா சம்பந்தப்பட்ட வழக்கு விபரங்களை கேட்காமல் உங்கள் சொந்த அபிப்பிராயங்களை தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் பேச கூடாது மீண்டும் மீண்டும் சொல்ல வருவது நீங்கள் கடவுள்கள் அல்ல அல்ல அல்ல


சின்ன சேலம் சிங்காரம்
ஜூலை 29, 2025 11:50

ஓ, நீதிபதி கூட அவரை நினைவில் வைத்திருக்கிறார் போலிருக்கிறது


Sudha
ஜூலை 29, 2025 11:19

சங்கருக்கு பத்ம பூஷன் வழங்கி யூ டுபேறுகளின் சேவைகளை கௌரவிக்கலாம்


Aanand Kanthasamy P
ஜூலை 30, 2025 13:19

ஆமாம், இந்த ஊழல் தலைமை நீதிபதி மூக்கை உடைக்க வேண்டும் என்பதற்காகவே சவுக்கு சங்கர் சேவையை பாராட்டி பத்ம பூஷன் விருது வழங்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை