உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 72 தொகுதிகள் வேண்டும்: காங்கிரசில் திடீர் குரல்

72 தொகுதிகள் வேண்டும்: காங்கிரசில் திடீர் குரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பேசியவர்கள், ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், பெரம்பலுார் மாவட்டத் தலைவர் சுரேஷ் பேசுகையில், ''கட்சி அமைப்பு ரீதியாக, 72 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற வகையில், 72 தொகுதிகளை தி.மு.க.,விடம் பெற வேண்டும்.''குறைந்தபட்சம் 60 தொகுதிகளையாவது பெற வேண்டும். இல்லையெனில், கூட்டணியை விட்டு விலக வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர், அதிக தொகுதிகள் தரும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும்,'' என்றார். அதைத் தொடர்ந்து பேசிய மற்ற மாவட்டத் தலைவர்களும், 'கூட்டணியில் தி.மு.க.,விடம் இருந்து கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும்' என வலியுறுத்தினர்.கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில், ''ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தாலும், மக்கள் பிரச்னைகளை எடுத்து பேச வேண்டும். ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். வரும் சட்டசபைத் தேர்தலுக்கு, அதிக தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும்,'' என்றார்.கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ''எம்.எல்.ஏ., பதவி பெற அனைவருக்கும் ஆசை இருக்கலாம். அதற்கு நேரம் வரும்போது பேசுவோம். அதற்கு முன் கட்சியை பலப்படுத்த, அனைவரும் உழைக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

M Ramachandran
ஏப் 26, 2025 20:56

ஆளுக்கு ஒரு முடி பிடுங்க அடியேன் தலை மொட்டை.


venugopal s
ஏப் 26, 2025 19:04

பாஜகவே அதிமுகவிடம் எழுபத்திரண்டு தொகுதிகள் கேட்கும் போது காங்கிரஸ் திமுகவிடம் எண்பத்தி இரண்டு தொகுதிகள் கேட்பதில் தவறு இல்லை!


krishna
ஏப் 26, 2025 15:45

MUDHALIL INDHA MAFIA MAINO CONGRESS DESA VIRODHA KATCHIYIL 72 PERU THAMIZH NAATIL IRUKKANGALA.IDHELLAM ORU KATCHI .ISHUKKU THALAIVAN THONDAN ENA THIRIUM KEVALANGAL.


SUBBU,MADURAI
ஏப் 26, 2025 16:32

காங்கிரஸ் கட்சியினரின் கொந்தளிப்பை கடைசியில் திமுகவின் அடிமையான பீட்டர் அல்போன்ஸ் தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டார்.


ராமகிருஷ்ணன்
ஏப் 26, 2025 15:27

வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று காங்கிரஸ்காரர்கள் அறிவித்துவிட்டார்கள், அதனால இப்படி கூப்பாடு போட்டு சலம்புகிறார்கள்.


SRIDHAAR.R
ஏப் 26, 2025 14:59

பீட்டரூக்கு கவலை இல்லை


Dilip
ஏப் 26, 2025 13:05

72 வார்டுகள் கூட ஜெயிக்க துப்பில்லாத கூட்டம் 72 அசெம்பிளி தொகுதி கேக்குதோ??


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 26, 2025 11:24

ஏற்கனவே கிம்ச்சை மன்னர் தூக்கமிழந்து தவிக்கிறார் ..... திமுகவை கனிமொழியிடம் கொடுத்துவிட்டால் காங்கிரசுக்கு இவ்வளவு துணிவு வராது ......


அரவழகன்
ஏப் 26, 2025 11:06

சரி..சரி.. ஒரமாக நில்லுங்க தி.மு.க.போடும் பிச்சை.. தேசிய கட்சியின் பரிதாபம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 26, 2025 10:45

அதாவது இது அதிமுகவை உசுப்பேத்தி விட திமுக செய்யும் நாடகம். இவர்கள் 72 தொகுதி கேட்டால் பாஜகவும் 72 தொகுதிகள் கேட்கும் அது அதிமுகவிற்கு எரிச்சல் ஏற்படுத்தும் அப்போது தனது ஸிலீப்பர் செல்களை வைத்து அதிமுக விற்கும் குழப்பத்தை ஏற்படுத்தி ஒன்று கூட்டணியை உடைப்பது இல்லை என்றால் அதிமுகவிற்குள் அதிருப்தி ஆட்களை உருவாக்கி அதிமுக வாக்குகளை பிரிப்பது இது திமுகவின் திட்டம். இதற்கு காங்கிரஸ் பகடை காய். இங்கு எல்லோருக்கும் தெரியும் காங்கிரஸ் 12 தொகுதிகளுக்கு மேல் வொர்த் கிடையாது என்பது. அதைத்தான் பீட்டர் அல்போன்ஸ் கடைசி பேராவில் கூறியிருக்கிறான்.


Dr. Ayyappan J
ஏப் 27, 2025 03:35

Exactly. Your prediction great Sir


Haja Kuthubdeen
ஏப் 26, 2025 10:21

தமிழ்நாட்டில் பிஜெபி எத்தனை தொகுதியில் நிற்கிறதோ அந்த அளவுக்காவது காங்கிரஸ் போட்டியிட்டால்தான் மரியாதையே...


krishna
ஏப் 26, 2025 15:47

HAJA DESA VIRODHA MIRUGA MOORGANUKKU CONGRESS KATCHIYAI MATTUME OIDIKKUM.EEN ENDRAAL UNGAL KEVALA DESIGN.BJP MODI ENDRAL DESA VIRODHA KUMBALUKKU BAYAM VERI.


புதிய வீடியோ