உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / என்ன நடக்கிறது தமிழ் துார்தர்ஷனில்?

என்ன நடக்கிறது தமிழ் துார்தர்ஷனில்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'சென்னை வானொலி மற்றும் துார்தர்ஷன் தமிழ் ஆகிய இரண்டுமே, மத்திய அரசுக்கு எதிராக செயல்படுகிறது' என, மத்திய அரசுக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளதாம். குறிப்பாக, சீனியர் எச்.ராஜா இது குறித்து பிரதமருக்கே தெரிவித்து விட்டாராம். 'பா.ஜ.,வின் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்கள் துார்தர்ஷன் தமிழில் அதிகரித்து உள்ளது தான் இதற்கு காரணம்' எனவும் ராஜா தெரிவித்து உள்ளாராம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c548cu9f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில், நடந்து முடிந்த ஹரியானா தேர்தல் குறித்து நடந்த விவாதங்களில், துார்தர்ஷன் தமிழ் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாம். 'பா.ஜ.,விற்கு எதிராக விவாதத்தில் பங்கேற்றவர் பேச, பா.ஜ., சார்பாக யாருமே பேச அனுமதிக்கப்படவில்லை' என, குற்றம் சாட்டப்படுகிறது.'தமிழகத்தை சேர்ந்த முருகன், செய்தி ஒலிபரப்பு துறையின் இணை அமைச்சராக இருந்தும், எப்படி துார்தர்ஷன் தமிழ் இப்படி செயல்படுகிறது?' என, துறையின் சீனியர் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.தனியார் தொலைக்காட்சிக்கு சமமாக துார்தர்ஷன் தமிழ் செயல்பட வேண்டும்; இதற்கான பொறுப்பு முருகனுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். அத்துடன், 'மோடி அரசின் சாதனைகளை, மக்களுக்கு அதிக அளவில் கொண்டு செல்ல, துார்தர்ஷன் தமிழ் பணியாற்ற வேண்டும்' எனவும் சொல்லப்பட்டு உள்ளதாம்.அனைத்து துார்தர்ஷன் சேனல்களையும் நிர்வகிக்கும், பிரசார் பாரதியின் தலைவர், நவ்நீத் குமார் சேகல், விரைவில் சென்னை வானொலி மற்றும் துார்தர்ஷன் தமிழ் சேனல் ஆகியவற்றை கண்காணிக்க சென்னை வர இருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 13, 2024 21:04

அடுத்து வரக்கூடிய தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கக்கூடும் ..... காங்கிரசும் செல்வாக்கிழக்கும் .... மாநிலக்கட்சிகள் பலம் பெறும் .... மத்தியில் கூட்டணி அரசு அமையும் ..... தனிநாடு கோரிக்கைகள் எழும் .... இந்த வரிசையில் கேரளா முதலிடம் ..... தமிழ்நாடு இரண்டாமிடம் .... பங்களாதேசுடன் இணைய மேற்குவங்கத்திலிருந்து கோரிக்கை எழும் ..... டிடி தமிழின் தமிழன்பன் பற்றி நினைவிருக்கலாம் ... ஓய்வு பெரும் வரை வேண்டுமென்றே பிரதமர் விபி சிங் என்று செய்தி வாசித்தவர் .... தமிழ்நாட்டில் எங்கும் தேசவிரோதம் .... எதிலும் தேசவிரோதம் என்பதுதான் நிதர்சனம் ..... வானொலியோ, தொலைக்காட்சியோ எப்படி விதிவிலக்காகும் ?? இந்த அமைச்சர் முருகன் கன்னியாகுமரி தமிழில் சொன்னால் ஒரு பழம் ...... அதனாலதான் தூக்கிவிட்டு அண்ணாமலையைப் போட்டாங்க .....


venugopal s
அக் 13, 2024 16:38

இதுபோன்ற கட்டுப்பாடுகளை எல்லாம் விதித்து மத்திய அரசின் கைப்பாவையாக வைத்து இருப்பதால் தான் தூர்தர்ஷன் விளங்காமல் போனது, யாரும் பார்க்க விரும்பாத டி வி சேனலாக மாறியது. அதை சுதந்திரமாக செயல்பட விட்டால் தான் உருப்படும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 13, 2024 21:07

காரணம் அதுவல்ல ........ மக்கள் ரசிக்கும் அளவுக்கு தரம் கெட்ட நிகழ்ச்சிகளை வழங்க முன்வராத பிடிவாதம்தான் காரணம் .......


பாமரன்
அக் 13, 2024 12:41

தமிழ் நாட்டில் பாஜகவுக்கு என ஒரு பத்திரிகை இருப்பது இங்கே எத்தனை பேருக்கு தெரியும்...? ஒரே நாடு எனும் அந்த பத்திரிகை ஆடு ஸார் டூர் போனதில் இருந்து முடங்கி கிடக்கிறது... கொஞ்சம் அங்கே போய் படிச்சு காப்பாத்துவீங்கலாலாலாமாம்... அப்புறம் பப்ளிக் சர்வீஸ் பண்ண துவக்கப்பட்ட தொல்லைகாட்சியில் கை வைக்கலாம்


பாமரன்
அக் 13, 2024 12:38

ஓஹோ... தூர்தர்ஷன்ல மக்கள் பார்க்கிற மாதிரி நிகழ்வுகள் கூட வருதா... சிலர் பார்க்கவும் செய்யறாங்களா... அப்ப அடேஷ்னிகள்ட்ட சொல்லி சண்டை போடாமல் பிரிச்சு எடுத்துக்க சொல்ல வேண்டியது தான்...


Kanns
அக் 13, 2024 09:49

Suspend Concerned Officials for Going Against Central Govt & Encouraging Divisive AntiNation-AntiNative People Parties. Transfer their Supporting Officials to Manipur


ஆரூர் ரங்
அக் 13, 2024 09:05

சீனியர் ஊழியர்கள் பெரும்பாலும் திமுக UPA ஆட்சியின் போது அமர்த்தப்பட்ட கையாட்கள்.


Sck
அக் 13, 2024 08:49

முருகன் சரியாக செயல்படவில்லை என்றுதான் தமிழக பஜக பதவியில் இருந்து விலக்கப்பட்டார். எனக்கென்னமோ அவர் கொஞ்சம் மசமச பேர்வழி என்றுதான் தோன்றுகிறது.


இளந்திரையன் வேலந்தாவளம்
அக் 13, 2024 08:22

அமைச்சர் முருகன் வேறுபல வேலைகளில் பிசியாக இருப்பதால் தனது துறையில் என்ன நடக்கிறது என ஆராய நேரமில்லை யுவர் ஹானர்


Balasubramanian
அக் 13, 2024 07:24

தமிழகத்தில் பெரும்பாலான ஊடகங்கள் மாடல் அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன! அதில் டி.டி தமிழும் சேர்ந்து இருப்பது ஆச்சரியம் தான்! நல்ல வேளை நான் காலை ஆலய நிகழ்ச்சிகள் மட்டுமே பார்க்கிறேன்


மோகனசுந்தரம்
அக் 13, 2024 06:21

இந்த முருகன் ஒரு வேஸ்ட் பீஸ். ஒன்றுக்கும் உதவா கறைகளை எல்லாம் மினிஸ்டர் ஆக்கினால் இப்படித்தான் இருக்கும். ஆனால் அண்ணாமலைக்கு எதிராக வாய் மட்டுமே அவ்வளவு பெரிதாக கிழியும்


சமீபத்திய செய்தி