உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வெள்ளியங்கிரி மலையில் என்னதான் நடக்கிறது? இந்தாண்டு ஏழு பேர் பலி: மருத்துவ வசதி மேம்படுத்த கோரிக்கை

வெள்ளியங்கிரி மலையில் என்னதான் நடக்கிறது? இந்தாண்டு ஏழு பேர் பலி: மருத்துவ வசதி மேம்படுத்த கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், இந்தாண்டு சீசனில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். இனிவரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, கட்டுப்பாடுகளை அதிகரிப்பதோடு, அவசர சிகிச்சை மருத்துவ வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள, தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர்.இந்தாண்டு, பிப்.,1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற, வனத்துறையினர் அனுமதித்தனர். வழக்கமாக மே 31ம் தேதி வரை அனுமதிக்கப்படும் நிலையில், தொடர் கனமழையின் காரணமாக, இந்தாண்டு, மே 25ம் தேதியுடன், பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது.

இந்தாண்டில் 7 பேர் உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை, 5.5 கி.மீ., தொலைவு கொண்ட, 7 மலைகளை உள்ளடக்கியது. கடல் மட்டத்திலிருந்து, சுமார் 6 ஆயிரம் அடி உயரமுள்ள இம்மலையில், 7 மலைகளும், ஏழு விதமான இடங்களாக உள்ளது. இந்தாண்டு மலை ஏறிய ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழப்புக்கான காரணம் மற்றும் தடுப்பதற்கான வழி என்ன என்பது குறித்து மலைவாழ் மக்களிடம் கேட்டபோது, '7 மலைகளும், ஒரேபோல இல்லை. ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு கால நிலையில் இருக்கும். மலையேறுபவர்கள், முழு உடற்தகுதி கொண்டு இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், உடல் உழைப்பு இல்லாத பணி மேற்கொள்பவர்களுக்கு, இது சிரமமானது.

மருத்துவ வசதி

அடிவாரத்தில், மலையேறும் இடத்துக்கும், மருத்துவ முகாம் அமைந்துள்ள இடத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது. படிக்கட்டுப் பாதையில் வனத்துறையினர் சோதனை செய்யும் இடத்தில், மருத்துவ முகாம் அமைத்து, மலையேறுபவர்களை, சோதனை செய்து அனுப்ப வேண்டும்.7 மலைகளில், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஆறாவது மலைதான் மிக சிரமமான மலை. இம்மலைகளிலேயே பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில், இம்மலைகளிலும், மருத்துவ முகாம்கள் அமைத்தால், முதலுதவி செய்து, பெரும்பாலான உயிரிழப்புகளை தடுக்கலாம்.அதோடு, கன மழையால், மலைப்பாதை மிகவும் மோசமாகியுள்ளது. பாறைகளில் அரிப்பு ஏற்பட்டு, கால் வைப்பது சிரமமாக உள்ளது. மரங்களின் வேர்கள் பாதையில் இருப்பதால், அதில், கால் சிக்கி பலரும் விழுகின்றனர்.7வது மலையில், பலகார மேடை அருகே உள்ள பாதை மிகவும் மோசமானது. அதில், இறங்கும் பலரும் அடிபடுகின்றனர். ஏழு மலைகளிலும் மலைப்பாதைகளை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலையின் மேலே மரணமடைந்த அந்த ஏழு பேர்

n மார்ச் 25: பெங்களூருவை சேர்ந்த சிவா, 36 என்பவர், தனது நண்பர்களுடன் மலையேறிவிட்டு கீழே இறங்கும்போது, மூன்றாவது மலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்.n ஏப்., 11: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ், 42, தனது நண்பர்களுடன் மலையேறி சுவாமி தரிசனம் செய்து, ஆறாவது மலை இறங்கும் போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.n ஏப்., 19: தூத்துக்குடி மாவட்டம், மேலூரை சேர்ந்த புவனேஷ், 18 நண்பர்களுடன் மலையேறிவிட்டு, இறங்கும்போது, 7வது மலையில், மழை ஈரத்தில் பாறையில் கால் வழுக்கி விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.n மே 7: உடுமலையை சேர்ந்த, சுந்தரம்,54 என்பவர், முள்ளாங்காட்டில் உள்ள ஆசிரமத்தில் தங்கி, வெள்ளியங்கிரி ஆறாவது மலையில் உள்ள கடையை, கவனித்துவிட்டு தூங்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.n மே 13: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஷ்வா, 15 தனது தந்தையுடன் மலையேறிவிட்டு, கீழே இறங்கும்போது, மூன்றாவது மலையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.n மே 25: புதுச்சேரி காரைக்காலைச் சேர்ந்த கவுசல்யா,45 என்பவர், 7வது மலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கும்போது, 6வது மலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.n மே 25: திருவண்ணாமலையை சேர்ந்த செல்வகுமார்,32 என்பவர், ஐந்தாவது மலையில் கீழே இறங்கி கொண்டிருக்கும் போது,மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Senthil Kumar
ஜூன் 07, 2025 11:10

நீங்கள் நம்பினால் நம்புங்கள்.. நான் ஒவ்வொரு வருடமும் 7மலைகள் வரை நீர் அருந்தாமலே ஏறி வருகிறேன்.. சித்தனை நினைந்து சிவ யோக நிலை என் ஈசன் இருக்க எதற்கு மரண பயம்.. சுயம்புவாக தோன்றி அருளும் பித்தன் அவன்.. சவத்தை பற்று அற்று அடையாமல் சிவத்தை காண முடியாது.. ஓம் சிவாயநம.


வவ்லவன்
ஜூன் 05, 2025 22:17

மலை ஏற முற்றிலுமாக தடைசெய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை


அசோகன்
ஜூன் 05, 2025 15:25

கின்னவுர் கைலாஷ் 6050 mtr உயரம் கொண்டது இது ஹிமாசலில் உள்ளது 2000mtr ரில் இருந்து ஏறவேண்டும் மிக மிக கடினமான ஏற்றம் கொண்ட பாதை....... இதை பலரும் பயணம் செய்து சிவபெருமானை தரிசனம் செய்கிறார்கள்.... செல்லவும் வழி சீமைத்து வைதுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் வழி நெடுகும் தங்கும் இடவசதி tent சாப்பாடு உள்ளது..... மலை ஏற அனுமதி பெரும் இடத்தில் மருத்துவ சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுகின்றனர்........6000 அடிக்கே இங்கே இப்படி......அங்கே 18150 அடி உயரம்


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 05, 2025 08:45

இதெல்லாம் விட முக்கியமான பிரச்சினை தண்ணீர். புதிதாக ஏறுபவர்கள் டூரிஸ்ட் இடமாக நினைத்து வருபவர்கள் தண்ணீர் தூக்க சிரமப்பட்டு லேஸ் போன்ற பாக்கெட் தீனிகள் சாப்பிட்டுக்கொண்டே ஏறுவது. இறங்கும்போது தண்ணீர் இல்லாமல் தவிப்பதும். அங்கு தண்ணீர் விற்பனை லிட்டர் நூறு ரூபாய்


Manaimaran
ஜூன் 05, 2025 08:06

அது ஆன்மிக பூமி சுற்றுலா தலம் அல்ல. பக்தியுடன் மெதுவாக ஏறினால் தடையின்றி செல்லலாம் நான் முந்தி. நீ முந்தினு ஓடுன சாகத்தான் வேண்டும் பல முதியவர்கள் சென்று நலமுடன் வருவதும் இருக்குது


kamal 00
ஜூன் 05, 2025 07:50

முறையான விரதமிருந்து பய பக்தியுடன் கட்டுப்பாடு அமைந்து வருவோர் க்கு நிச்சயம் அருள் உண்டு.... குச்சியை தூக்கிட்டு நானும் ட்ரெக்கிங் போறேன்னு கும்பலா கூத்தடிக்க வந்தா அதன் பலன் உண்டு


அன்பே சிவம்
ஜூன் 05, 2025 07:07

1). ஒரு மண்டலம் விரதம் இருந்து மலை ஏறுபவர்களுக்கு உடலும் மனமும் தூய்மையாக இருப்பதால் எந்த பிராப்ளம் வருவது இல்லை. வராது. 2). அதே சமயம் முதல் நாள் வரை தண்ணீ, பீடி சிகரெட் குடித்து விட்டு மலை ஏறினால் மோட்சம் நிச்சயம்.


kamal 00
ஜூன் 05, 2025 07:47

உண்மை


முக்கிய வீடியோ