உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கான பின்னணி என்ன?

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கான பின்னணி என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் நெருக்கடிகளை சமாளிப்பதுடன், ஓட்டு சதவீதம் குறைவதை தடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்; இது திட்டங்கள், கொள்கைகளை வகுத்து, அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.கடைசியாக, 2011ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த, 2021ல் நடக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

எதிர்ப்பு

இந்த சூழ்நிலையில், அடுத்து நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.இதன் வாயிலாக, 1931க்குப் பின் நாட்டில் நடக்கும் முதல் முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது, கலவையான விமர்சனங்களை முன்வைத்துஉள்ளன.எதிர்க்கட்சிகளின் தொடர் நெருக்கடிக்கு பணிந்து, மத்திய அரசு இதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பல அரசியல் நோக்கங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.குறிப்பாக, பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு முதல்வராக உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார், தற்போது பா.ஜ.,வுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். முன்பு, காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் ஆட்சி அமைத்திருந்தபோது, 2023ல் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினார்.இதைத் தொடர்ந்தே, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என, பல மாநிலங்களிலும், ஜாதிவாரி மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.பீஹார் அரசியலில் ஜாதிவாரி ஓட்டுகளே முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.அதுபோல, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், 2027ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், 80ல் 33ல் மட்டுமே பா.ஜ., வென்றது. இதற்கு முக்கிய காரணம், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆதரவு கிடைக்காததே. மாநில மக்கள் தொகையில், இப்பிரிவினர், 50 சதவீதம் உள்ளனர்.

மக்கள் தொகை

அதனால், மத்திய அரசின் தற்போதைய முடிவு, அரசியல் நெருக்கடிகளால் எடுக்கப்பட்ட ஒன்றாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் அதன்பின் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னையாக முன்வைத்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.கடைசியாக, 1931ல் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில், நாட்டில், 4,147 ஜாதிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், உட்பிரிவுகளும் அதிகளவில் உள்ளன.லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சிறப்புமிக்க சட்டத்தை, பா.ஜ., அரசு நிறைவேற்றியுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு, லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும்.வரும், 2026க்குப் பின் நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்யப்படும் என, 1971ல் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.அதற்கு முன்பாக, தற்போது நடத்தப்பட உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு, இவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.,வுக்கு வெற்றியா?

தற்போது நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது, இருமுனை கத்தி போன்றது. ஒவ்வொரு ஜாதியினரும், தங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்று முயற்சிப்பர். இது மக்கள் தொகை கணக்கெடுப்பில் மட்டுமல்ல, இட ஒதுக்கீடு உட்பட அனைத்திலும் எதிரொலிக்கும். இது மத்திய அரசுக்கு மிகப்பெரும் சவாலாக அமையும். கடந்த, 1990களில் மண்டல் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தியதால், நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள், மோதல்கள், வன்முறைகளை மறக்க முடியாது. கடைசியில், சமூக பதற்றம் ஏற்பட்டதுடன், பிரதமராக இருந்த வி.பி.சிங்கின் ஆட்சி கவிழவும் காரணமாயிற்று. இதை பா.ஜ., எப்படி எதிர்கொள்ளும் என்பதில், இந்தக் கணக்கெடுப்பின் பலன் தெரியவரும்.மற்றொரு முக்கியமான அம்சம், ஓ.பி.சி.,க்கு என, தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் வாயிலாக, மத்திய பட்டியல் உள்ளது. இதன்படி, 2,650 ஜாதியினர் இதில் உள்ளனர். இதைத் தவிர, மாநில அளவிலும் ஒரு பட்டியல் உள்ளது. அதனால், வரும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின், இந்தப் பட்டியல்கள் ஒருங்கிணைக்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

jss
மே 04, 2025 16:44

2011 ல் மக்கள் தொகை கணக்காளர் எங்கள் வீட்டிற்க்கு வரவில்லை. இதே பொல் எத்தனை வீட்டிற்க்கு போகவில்லை என்பது ஒரு கேள்வி குறி. காங்குரஸ் ஆட்சியின் பொய்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஒன்று.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 04, 2025 12:31

சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்ந்தி உயர்த்தி சொல்லல் பாவம். நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட பகுதியில் எறிவரோ சொல்லடி சிவசக்தி


ஆரூர் ரங்
மே 04, 2025 11:31

எல்லாம் தேர்தல் ஸ்டண்ட். எந்தக் கட்சியும் நிஜமாகவே ஏழ்மையில் உள்ள மிகவும் பிற்பட்ட சமூகங்களின் கையில் முழுமையான ஆட்சி அதிகாரத்தை அளிக்காது. ஏனெனில் மற்ற வகுப்பினரின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும். தெலங்கானாவில் சாதிக் கணக்கெடுப்பு நடத்தி 57 சதவீதம் OBC என கண்டுபிடித்தனர். ஆனால் சோனியாவின் முடிவுப்படி மெஜாரிட்டி அமைச்சர்களும் முதல்வரும் மிகவும் முற்பட்ட வகுப்பினர். கர்நாடக காங் முக்கிய தலைவர்கள் சாதிக்கணக்கெடுப்பு சர்வேயை நிராகரித்துள்ளனர். பல கோடி வீண் செலவு ஆனது. இடஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்யும் திமுக சார்பில் எந்த காலத்திலும் ஒரு SC முதல்வராக முடியாது.


SUBBU,MADURAI
மே 04, 2025 15:27

திமுக இதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காமல் மத்திய அரசின் மேல் பழியை போட்டு வந்தது இதோ பாஜக மோடி அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டுள்ளது இந்த அறிவிப்பு உள்ளபடியே இதுவரை சாக்கு போக்கு சொல்லி வந்த திமுக தலைமைக்கு தலையில் விழுந்த இடியாகும் ஏனென்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் கருணாநிதியின் ஜாதியான சின்னமேளம் என்ற ஜாதி தமிழகத்தில் 0.05 சதவீதம் மட்டுமே உள்ளனர் என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வரும் அப்படி தெரிந்தால் இவ்வளவு சொற்பமான எண்ணிக்கையில் உள்ள ஓங்கோல் தெலுங்கு இனமான சின்ன மேளத்தை சேர்ந்த கருணாநிதி குடும்பம் எப்படி மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள மற்ற ஜாதிகளை அடக்கி தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டு இத்தனை வருடங்களாக பதவியில் இருந்தார்கள் என்கிற முழு விபரமும் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியவரும் அந்த ஒரே காரணத்திற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் இதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன்வரவில்லை இப்போது பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது இனியாவது இந்த திராவிடமாடல் அரசு மத்திய அரசுடன் சேர்ந்து நேர்மையாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும்.


சந்திரசேகர்
மே 04, 2025 09:25

சாதி விட்டு சாதி திருமணம் செய்தவர்கள் எந்த சாதியை தேர்ந்தெடுக்கலாம்.ஒரு குடும்பத்தில் பல சாதிகள் இருந்தால் எதன் அடிப்படையில் தேர்வு செய்ய முடியும்