உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அடுத்து என்ன..? இந்தியா - பாகிஸ்தானில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பு

அடுத்து என்ன..? இந்தியா - பாகிஸ்தானில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பு

* பஹல்காம் தாக்குதலில்ல அப்பாவி மக்கள் 26 பேரை கொன்றுக் குவித்த பாகிஸ் தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறது. 2019ல் இந்தியா பாலக்கோட்டில் அதிகாலையில் நடத்திய வான்வெளி தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்தது. அதுபோன்று மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் பாகிஸ்தான் பயந்து நடுங்கியுள்ளது. * இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கண்காணித்து வரும் பாக்., நிர்வாகம், ராணுவ அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. பாக்., நகரங்களில் இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பழமைவாதிகளை வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறது. * இரு நாடுகளிலும், போர் மேகங்கள் சூழ ஒவ்வொரு நொடியிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. * போருக்கு ஆயத்தமாக இந்திய விமானப்படை ராபேல், சுகோய் -30 உள்ளிட்ட போர் விமான குழுக்களை உள்ளடக்கி, 'ஆக்ரமன்' எனும் போர் பயிற்சியை நேற்று துவங்கியது. * அம்பாலா மற்றும் மேற்கு வங் கத்தின் ஹாஷிமாரா விமான படை தளங்களில் இருந்து வந்துள்ள விமானப்படை வீரர்கள் தரைவழி தாக்குதல் மற்றும் மின்னணு போர் நுணுக்கங்கள் குறித்து பயிற்சி மேற்கொண்டனர். * பாகிஸ்தானியர் வெளியேற இந்தியா கெடு விதித்த நிலையில், 28 பாகிஸ்தானியர் திருப்பி அனுப்பப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து 105 இந்தியர் நேற்று நாடு திரும்பினர். * இரு நாடுகளுக்கு இடையே அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச்சாவடிகளில் நுழைவு வாயில்கள் இழுத்து மூடப்பட்டன. * பாகிஸ்தான் வான்பரப்பில், இந்திய விமானங்கள் பறக்க அந்நாடு தடை விதித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களை, விரிவுப்படுத்தப்பட்ட மாற்றுப்பாதையில் இயக்க, ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. * பாகிஸ்தானுக்கு எதிராக, பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று பிரதமர் மோடியிடம், காஷ்மீர் தாக்குதல் குறித்து போனில் விசாரித்தார். பலியான மக்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு தனது ஆதரவை அறிவித்தார். * இந்தியா-பாக்., இடையே, கடந்த 1972ம் ஆண்டில் கையெழுத்தான சிம்லா அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது. * இந்தியா பாகிஸ்தான் எல்லை பஞ்சாப் பெரோஸ்புர் பகுதியில் தவறுதலாக நுழைந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங் என்பவரை, பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். அவரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kalyan
ஏப் 25, 2025 13:19

அத்தகைய எல்லை மீறிய ஒருவர் நம் மகன்களோ சகோதரர்களோ ஆக இருந்தால் அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறுவோமா? மனித உயிர் அதுவும் நம் நாட்டின் எல்லை காக்கும் ஒரு வீரனின் உயிர் என்றும் விலை மதிக்க முடியாதது


Karthik
ஏப் 25, 2025 11:57

எல்லையில் காவல் விற்பதே அந்த வீரரின் பணி. எல்லை எங்கு உள்ளது என்று கூட அறியாமல் ஆடு மேய்ப்பவரோடு சேர்ந்து எதிரி நாட்டு எல்லையின் உள் சென்று இளைப்பாறுவது கடமை தவறிய செயலே. அந்த ஒரு பிஎஸ்எப் வீரரை சுட்டுக் கொள்ளும்படி உத்தரவிடுங்கள். ஒரே ஒரு வீரருக்காக நாடு சமரசம் பேச செய்ய வேண்டாம். ஒரு கப்பலை காப்பாற்ற ஒருவரை இழந்தால் தவறில்லை என்பதுபோல் நாட்டை காப்பது தான் முக்கியம். எனவே அந்த ஒரு வீரரை பொறுப்பெடுத்தாது மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை செய்வதே உத்தமமாக இருக்கும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 25, 2025 13:58

கருத்து கூறுவது சுலபம் களத்தில் எதார்த்த நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது. முதலில் அந்த வீரர் எப்படி எல்லை தாண்டினார் என்பது கண்டறியப்பட வேண்டும். பாகிஸ்தான் இராணுவம் வேண்டும் என்றே எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வந்து கூட இவரை கடத்தி கொண்டு போய் கைது செய்து இருக்கலாம். ஏனெனில் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நடந்திருப்பதால் இந்தியாவை மிரட்ட பாக் உளவு அமைப்பு இது செய்திருக்க வாய்ப்பு உண்டு. காடுகள் வான் வெளியில் கடலில் எல்லைகள் கண்டு கொள்வது கடினம். அஹோபிலம் மலை கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அங்கு மலை ஏறும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். சிறிது தவறினாலும் பாதை மாறி கானகத்தில் சென்று விட வாய்ப்புண்டு. உள்ளூரில் இந்த நிலை என்றால் நாட்டின் எல்லையோரம் எப்படி இருக்கும் என்பதை நாம் ஊகித்து தான் தெரிந்தது கொள்ள வேண்டும். ஆகவே இது பாகிஸ்தான் செய்த செயலாக இருந்தால் இதற்கும் சேர்த்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பாகிஸ்தான் பொருளாதார நிலைமை மிகவும் மோசம். மக்கள் நாளுக்கு நாள் அரசின் மீதான வெறுப்பு அதிகரித்து கொண்டு உள்ளது. இந்த மக்கள் நிலையை மடை மாற்றத்தான் பாகிஸ்தான் எப்பொழுதும் தீவிர வாதிகளை ஊரடுருவ வைத்து இது போன்ற செயல்கள் செய்து அதை அங்கு ஊடகங்கள் மூலம் பெரிது படுத்தி சில காலம் மக்கள் மனநிலையை மாற்ற முயற்சிக்கும். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் திமுக அரசு மீது அமலாக்க துறை ஆயிரம் கோடி ஊழல் குறிப்பிட்டது. இதனை மடை மாற்றி மக்கள் மனதை திசை திருப்ப பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற வெடிக்காத குண்டை வீசி சில மாநில தலைவர்களை அழைத்து மாநாடு நடத்தி அதை ஊடகங்களில் வெளி வரச்செய்து சில நாட்கள் அந்த ஆயிரம் கோடியை மக்கள் மனதில் இருந்து நீக்கியது அல்லவா அது போல தான் பாக்கிஸ்தான் செய்வதும். ஆனால் இம்முறை இந்தியாவின் நிலை மிக மிக கடுமையாக இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான மக்கள் கருத்து. ஆனால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பது போல பாகிஸ்தான் இந்த செயல் மீண்டும் காங்கிரஸ் துணையோடு செய்திருக்கலாம் என்று சந்தேகம் மக்கள் மனதில் தோன்ற ஆரம்பித்தது விட்டது. இனி காங்கிரஸ் அடுத்த முறையாவது வருவது நிச்சயம் இல்லாமல் போய் விட்டது. காங்கிரஸ் கட்சி அழிந்தால் பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதமும் அழிந்து விடும்.


முக்கிய வீடியோ