உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காப்பீடு அட்டை எங்கே? 9,700 போலீசார் தவிப்பு

காப்பீடு அட்டை எங்கே? 9,700 போலீசார் தவிப்பு

தமிழக காவல் துறையில், 2022ல் பணியில் சேர்ந்த போலீஸ்காரர்களுக்கு, மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கப்படாததால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில், 2022ல், 9,700 பேர் கான்ஸ்டபிள்களாக பணியில் சேர்ந்தனர். இவர்களின் ஊதியத்தில் இருந்து மாதம் 300 ரூபாய், இன்சூரன்ஸ் கட்டணமாக பிடிக்கப்படுகிறது. ஆனால், இதுநாள் வரை மருத்துவ காப்பீடு அட்டையோ அல்லது காப்பீட்டுக்கான எண்களோ, அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அல்லது ஏதேனும் விபத்தில் சிக்கினாலோ, காப்பீடு அட்டை இல்லாததால், தங்களின் சொந்த செலவில் தான் அவர்கள் சிகிச்சை பெற வேண்டி உள்ளது.

இதுகுறித்து, போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:

கடந்த, 2022ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீஸ்காரர் அனைவரும், 'நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த அட்டை வாயிலாக, தமிழகத்தில் எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மூன்று ஆண்டுகளாகியும் எங்களுக்கு மட்டும் காப்பீடு அட்டை வழங்கவில்லை. இதனால், இலவச சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காப்பீடு அட்டையை, யாரிடம் கேட்பது என்பது கூட தெரியாமல் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Gajageswari
செப் 30, 2025 17:24

₹100 ஆட்டையை போட்ட அரசு


Padmasridharan
செப் 30, 2025 17:06

மக்களை பஞ்சாயத்து என்ற பெயரில் அதிகாரம் செலுத்தி பணம் / பொருள் பிடுங்குபவர்களுக்கு காப்பீடு அட்டையை, யாரிடம் கேட்பது என்பது தெரியவில்லையா சாமி.


சாமானியன்
செப் 27, 2025 22:40

எதையுமே ஒழுங்கா செய்யாது திமுக அரசு. மக்கள் வெறுத்து போய் உள்ளனர். அரசா சினிமாவா ? நல்ல அரசு என்று மீடியாவில் வந்தால் போதுமா ? நிஜத்தில் அவ்வாறு இல்லை என ஆட்டோக்காரர் சொல்கிறார்.


Anantharaman Srinivasan
செப் 27, 2025 21:05

மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யபடும் 300ரூ National Insurace கணக்கில் கட்டப்பட்டுள்ளாதா..? Director General of Police தான் தீர்வு காண வேண்டும்.


Ravi Kumar
செப் 27, 2025 19:04

நமது மக்களின் அறியாமை ..கடமை உரிமை ,, கருவூலம் அலுவலகம் மூலம் கிடைக்கும் .


bala
செப் 27, 2025 06:44

not only the police department, my mother is getting a pension from the municipal pension but she in not getting the card after my father expired 3 years before. They took money from pension for health insurance.


புதிய வீடியோ