உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இ.சி.ஆரில் ஸ்கெட்ச் போட்ட கார் எது?: போலீஸ் விசாரணை

இ.சி.ஆரில் ஸ்கெட்ச் போட்ட கார் எது?: போலீஸ் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : இ.சி.ஆரில், கார் மற்றும் ஜீப்பில் பெண்களை துரத்திய, சீட்டிங் சந்துரு, யமஹா சந்தோஷ் ஆகியோர், 'ஸ்கெட்ச்' போட்ட மற்றொரு கார் யாருடையது என, போலீசார் விசாரிக்கின்றனர்.கடந்த மாதம் 25ம் தேதி அதிகாலை, 2:00 மணியளவில், சென்னை இ.சி.ஆரில் காரில் சென்ற பெண்களை, கார் மற்றும் ஜீப்பில் துரத்தியது தொடர்பாக, இரும்புலியூரை சேர்ந்த, 'சீட்டிங்' சந்துரு, 26, பீர்க்கங்காரணையை சேர்ந்த, 'யமஹா' சந்தோஷ்,28 உட்பட, ஐந்து பேர் கைதாகி உள்ளனர். போலீசாரிடம் சந்துரு அளித்த வாக்குமூலத்தில், 'பெண்கள் சென்ற காரை துரத்தி பிடிக்குமாறு, சந்தோஷ் தான் கூறினார். அதன்படி தான் செயல்பட்டேன். கானத்துாரில் உள்ள வீட்டுக்கு பெண்கள் சென்றதும், திடீரென நான் இந்த காரை பிடிக்கச் சொல்லவில்லை; அந்த பெண்களிடம் மன்னிப்பு கேள் என்றார்; அதன்படி செய்தேன்' என, கூறியுள்ளார்.அப்படியானால், சந்தோஷ் துரத்தி பிடிக்கச் சொன்ன கார் யாருடையது என்ற கேள்வி எழுகிறது. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.சந்துருவுடன் போலீசார் சிலர் நட்புடன் பழகி வந்துள்ளனர். அவர்களுக்கு கார்களை கொடுத்து உதவி செய்துள்ளார். சந்தோஷ் மற்றும் சந்துரு ஆகியோர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இ.சி.ஆரில் சென்ற கார் ஒன்றுக்கு சந்தோஷ், 'ஸ்கெட்ச்' போட்டுள்ளார். அது பற்றி விசாரித்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

nv
பிப் 05, 2025 22:17

காவல்துறை காமெடி பீஸ் ஆயிடுச்சு? அவனுங்க கதை சொல்ல இவர்கள் வசனம் எழுதுவது போல நல்ல தமாஷ்.. எப்படி இருந்த தமிழக காவல்துறை இப்படி ஆயிடுச்சு!! திராவிட மாடல் காமெடி


கிஜன்
பிப் 05, 2025 22:00

கதாசிரியர்கள் இனி ரூம் போட்டே யோசிக்கவேண்டாம் ..... யார் அந்த சாரின் நண்பர்கள் கதைய வச்சு ஒரு 50 படம் எடுக்கலாம் ....


lana
பிப் 05, 2025 16:30

இப்போது வரும் திரைப்படம் எல்லாம் ஒரேயடியாக அரைத்த மாவையே அரைக்கும் படி உள்ளது. நமது காவல் துறையினர் திரைக்கதை எழுதினால் சில்வர் ஜூப்ளி தான். கற்பனை சக்தி வேண்டும் தான் ஆனால் அது இந்த மாதிரி செயலுக்காக முட்டு குடுக்கும் அளவுக்கு தேவையில்லை


அப்பாவி
பிப் 05, 2025 08:59

2047 க்குள்ளாற கண்டு பிடிச்சிடுவாய்ங்க.


Karthik
பிப் 05, 2025 07:00

நல்ல மடை மாற்றம். நாசமா போக..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை