உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகம் விரும்பும் அடுத்த முதல்வர் யார்: கருத்து கணிப்பில் புது தகவல்

தமிழகம் விரும்பும் அடுத்த முதல்வர் யார்: கருத்து கணிப்பில் புது தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் முதல்வராக வேண்டும் என்பதில், 27 சதவீதம் பேர், தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் களத்துக்கு புதுமுகமான நடிகர் விஜய்க்கு 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து தமிழகமும் தேர்தலை சந்திக்க உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=foiq22yq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் 'சி வோட்டர்ஸ்' என்ற தனியார் அமைப்பு, தமிழக நிலவரம் தொடர்பாக கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன.யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு, 27 சதவீதம் பேர், தற்போதைய முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய்க்கு, 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.முன்னாள் முதல்வரான, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு 10 சதவீதம் பேரும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஸ்டாலினுக்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ள நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் இருப்பது, வரும் மாதங்களில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக கருதப்படுகிறது.மேலும், மீதமுள்ள 36 சதவீதம் பேரின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பது, தேர்தல் முடிவுகளை புரட்டி போடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, 15 சதவீதம் பேர், மிகவும் திருப்தி என்று கூறியுள்ளனர். ஓரளவுக்கு திருப்தி என, 36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில், 25 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும், 24 சதவீதம் பேர் எதையும் கூற முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.முதல்வராக ஸ்டாலினின் தனிப்பட்ட செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, 22 சதவீதம் பேர் மிகவும் திருப்தி என்று கூறியுள்ளனர். ஓரளவுக்கு திருப்தி என, 33 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 22 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும் 23 சதவீதம் பேர் எதையும் கூற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமியின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக, 8 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஓரளவுக்கு திருப்தி என27 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில், 32 சதவீதம் திருப்தி இல்லை என்றும், 33 சதவீதம் பேர் எதையும் கூற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தற்போதுள்ள முக்கிய பிரச்னையாக, 15 சதவீதம் பேர் பெண்கள் பாதுகாப்பை குறிப்பிட்டுள்ளனர். 12 சதவீதம் பேர் விலைவாசி உயர்வையும், 10 சதவீதம் பேர் போதை மற்றும் மது சம்பவங்களையும் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

P. SRINIVASAN
ஏப் 03, 2025 17:27

இந்த சங்கிகளுக்கு வயித்தெரிச்சல் தங்களை.. பிஜேபி தலை கீழே நின்னாலும் தமிழ்நாட்டில் உங்க பருப்பு வேக்காடு. உங்க ஆதிக்க புத்திய மாத்திக்குங்க..


என்றும் இந்தியன்
ஏப் 02, 2025 16:10

எந்த கழுதையும் நல்ல கழுதையம்மா, அரசியலில் சினிமாவில் இருக்கையிலே, அவ்வளவு கேவலம், இந்த டாஸ்மாக் குடிகார மாநிலத்திலே, கருத்து கணிப்பு


Mediagoons
மார் 31, 2025 21:29

அண்ணாமலைக்கு மோடியின் ஆதரவிருந்தும் விஜய்யை விட மிக குறைவு. பேசாமல் IPS வேலைக்கு திரும்ப செல்வதுதான் நல்லது


Palanivelu Kandasamy
ஏப் 04, 2025 11:09

IPS வேலை என்ன சத்திரமா - வரவும் போகவும்?


Ganapathy Subramanian
மார் 31, 2025 12:01

ஏன் இந்த லிஸ்டில் உதையண்ணா இல்லை?


என்றும் இந்தியன்
ஏப் 02, 2025 16:13

கருத்து கணிப்பில் உதைத்து தள்ளிவிட்டார்கள்


angbu ganesh
மார் 31, 2025 09:49

இதுவரைக்கும் எந்த ஒருத்தனும் என்கிட்டே இந்த மாதிரி அடுத்த முதல்வர் யாருன்னு கேக்கல ஏன் எனக்கு தெரிஞ்ச ரொம்ப பேர் கிட்ட கேட்டு பார்த்துட்டேன் எல்லோரும் அப்படி யாரும் எங்க கிட்ட கேக்கலேன்னு சொல்ராங்க அப்புறம் எப்படி இது நீங்க சொல்ற 2ண்டு பேருக்கும் எங்க ஆதரவு கண்டிப்பா இல்ல


பெரிய ராசு
மார் 30, 2025 16:16

லயோலா கருத்து கணிப்பு எப்படி இருக்கும்? .


theruvasagan
மார் 30, 2025 16:04

இந்த கருத்து கணிப்பு 90 சதவிகிதம் போதையே தெளியாத டாஸ்மாக் மட்டைகளிடமும் ஹீரோ போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகளிடமும் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.


Suresh Sivakumar
மார் 30, 2025 14:03

Made up. If this is true, people are fools


என்றும் இந்தியன்
ஏப் 02, 2025 16:20

1.48 crore voters voted for dmk are fools


Rajasekar Jayaraman
மார் 30, 2025 13:45

இது முழுக்க முழுக்க திருட்டு திராவிடத்தால் உருவாக்கப்பட்ட கருத்துக்கணிப்பு.


SUBBU,MADURAI
மார் 30, 2025 15:43

27 சதவீதம் பேர் ஸ்டாலினுக்கு ஆதரவாம் அப்படீன்னா அவருக்கு ஓட்டு போட்ட 43 சதவீதம் மக்களில் 16 சதவீதம் பேர் யாருக்கு வாக்களித்தார்கள் இதெல்லாம் திமுக கைகூலிகளின் தில்லாலங்கடி கருத்து திணிப்பு இதுல விஜய் வேறு இரண்டாவதாம் அடேய் உங்க கருத்து கணிப்பில் தீயை வைக்க நடிகர் ஜோசப் விஜய்க்கு ஓட்டு சதவீதம் என்னவென்றே தெரியாத நிலையில் அவன் எப்படி இரண்டாவது இடத்துக்கு வர முடியும்.திமுகவை பொறுத்தவரை அவன்கள் ஆளும்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பத்திரிக்கை ஊடக வியாபாரிகள், மெயின் ஸ்டீம் தொலைக்காட்சிகள், மற்றும் நீதித்துறை, எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருப்பார்கள். இதுக்கெல்லாம் மூல காரணம் கட்டுமரம் அன்றி வேறு யாராக இருக்க முடியும்


Ethiraj
மார் 30, 2025 13:20

Law and order, oppresing opposition parties, treating voters as beggars, poor fiscal management is really worrying


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை