உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., எம்.பி.,யாவாரா கமல்? திடீர் நிபந்தனையால் அதிர்ச்சி

தி.மு.க., எம்.பி.,யாவாரா கமல்? திடீர் நிபந்தனையால் அதிர்ச்சி

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை, சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று, துணை முதல்வர் உதயநிதி சந்தித்து பேசினார். தேர்தல் வாக்குறுதியின்படி, வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில், கமலுக்கு வாய்ப்பு அளிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது.ஆனால், அவரது கட்சி சார்பாக இல்லாமல், தி.மு.க., சார்பில் கமல் போட்டியிட வேண்டும் என்றும், தி.மு.க., - எம்.பி.,க்கள் வரிசையில், அவர் இடம்பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்தே, நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகர் கமல் அதிர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qvdcw6mi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சந்திப்பு குறித்து உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கமலை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அன்போடு வரவேற்று, அரசியல், கலை என, பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துகளை பறிமாறிக் கொண்டோம். கமலுக்கு என் அன்பும் நன்றியும் தெரிவிக்கிறேன்' என, கூறியுள்ளார்.கமல் அறிக்கையில், 'நெடுநாள் நீடிக்கப் போகும் இனிய நினைவாக, இந்த சந்திப்பு அமைந்தது. உதயநிதியின் அன்புக்கும் பண்புக்கும் என் நன்றி' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Ethiraj
பிப் 20, 2025 11:53

Kamal shameless man


Padmanabhan
பிப் 18, 2025 12:56

கமல்ஹாஸன் ஒரு நல்ல நடிகர். அரசியலில் நுழைய கட்சி ஆரம்பித்து, நடத்திப் பார்த்து சிரமங்களை புரிந்து கொண்டார். கட்சியைக் கலைத்தால் கேலி செயய்வார்கள்.சினிமா வருமானம் முக்கியம்,ஆளும் தரப்பு இவரால் பிளாக் அண்ட் ஒயிட்டாக முக்கியமான நன்மை அடைகிறது. ஆளுங்கட்சியிடம் சரணாகதி.


நரேந்திர பாரதி
பிப் 16, 2025 03:52

மனிதன் பாதி...மிருகம் பாதி...யாரும் உணர முடியா பிறவி இது


M. PALANIAPPAN
பிப் 15, 2025 11:05

எம். பி ஆவது என்பது சும்மாவா? இதுபோல ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்க போவது இல்லை கிடைத்த சந்தர்ப்பத்தை கமல் நன்கு பயன்படுத்தி கொள்ளவார் , மக்கள் நீதி மய்யம்மாவது, மண்ணாங்கட்டியாவது


பாலா
பிப் 18, 2025 17:27

உப்புப் போட்டு சாப்பிடுபவனா?


Bhaskaran
பிப் 15, 2025 09:43

சீட் வேண்டாம்னு காசை வாங்கிடுவாங்களோ


Bhaskaran
பிப் 15, 2025 09:42

மானம் உள்ளவர்கள் மறுப்பார்கள்


BalaG
பிப் 14, 2025 23:16

கமல் மேலும் மேலும் அரசியலில் அசிங்கப்படுவதை தவிர்க்க அவர் இப்போதே அரசியலை விட்டு விலகுவது மீதி உள்ள மரியாதையையாவது காப்பாற்றிக் கொடுக்கும். கூடா நட்பு கேடாய் முடியும். எல்லாம் தெரிந்த ஆண்டவருக்கு இது தெரியலையா???


Prabakaran J
பிப் 14, 2025 22:31

Torch light, satha torch lite anathu. Antha padam kuda ok ivanunga torchlight ke torch Adi kuranga...soon kamal change the name to kamalanithi.


Mohanakrishnan
பிப் 14, 2025 21:45

அடிமைக்கு அதிர்ச்சி ஒரு கேடா ...பைத்தியக்காரன்கள்


ஆரூர் ரங்
பிப் 14, 2025 21:17

ஈவேரா கூட பிராமண வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததுண்டு. ஆனா உதயசூரியனில் பிராமண MP, MLA வேட்பாளர் என்பது வரலாற்றிலேயே கிடையாது. அவங்க அதிகாரப்பூர்வ பேச்சாளரே பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் எனப் பேசினார். கமல் தன்னை சாதியற்றவர் எனக் கூறிக் கொண்டாலும் திமுக அவரை பிராமணராகவே பார்க்கிறது என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை