உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நண்பரே துரோகியானால் நான்கு காரணங்கள் இருக்கும்!

நண்பரே துரோகியானால் நான்கு காரணங்கள் இருக்கும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த முறை அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் இந்தியா வந்தபோது, அவரும், பிரதமர் மோடியும் கட்டித் தழுவி நட்பை வெளிப்படுத்தினர். ஆனால் இந்த முறை அதிபரான டிரம்ப் மாறிவிட்டார்.'ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் வரிவிதிப்பு அதிகமாக இருக்கும்' என எச்சரித்தார். ஆனால், மோடியோ அதை கண்டுகொள்ளாமல், 'இந்திய மக்களுக்கு எது நன்மை தருமோ அதைத்தான் செய்வேன்' எனக் கூறி, டிரம்பை 'டம்மி'யாக்கிவிட்டார்.கோபத்தில் கொந்தளித்த டிரம்ப் இந்தியா மீது ஏகப்பட்ட வரிவிதிப்பு செய்து, மோடியின் துரோகியாகிவிட்டார். இப்படி நண்பர் துரோகியாக மாறியது ஏன்? இதற்கு, நான்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன.முதலாவது, 2019ல் டிரம்ப் அதிபராக இருந்தபோது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அமெரிக்க சென்றார். அப்போது, 'காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண அமெரிக்க உதவியை மோடி நாடியுள்ளார்' என, இம்ரானிடம் தெரிவித்தாராம் டிரம்ப்; இதற்கு மறுப்பு தெரிவித்தார் மோடி.இரண்டாவது, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றபோது, டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் என, இரண்டு வேட்பாளர்களையும் சந்திக்க நேரம் கேட்டிருந்தாராம் மோடி. உடனே, ஒரு கூட்டத்தில், 'மோடி என்னை சந்திக்க வருகிறார்' என, அறிவித்துவிட்டார், டிரம்ப்; ஆனால் கடைசி நேரத்தில், கமலா ஹாரிஸ் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. 'ஒரு வேட்பாளரை மட்டும் சந்தித்தால் சரியிருக்காது' என, தன் அமெரிக்க பயணத்தையே ரத்து செய்துவிட்டார் மோடி.மூன்றாவது, 'இந்தியா -- பாக்., போரை நிறுத்தியது நான்தான்' என, 42 முறை சொல்லிவிட்டார் டிரம்ப். 'ஆனால், இது உண்மையல்ல' என மோடி கூறியதை, டிரம்ப் காது கொடுத்து கேட்கவே இல்லை.நான்காவது, கனடாவில் நடந்த, 'ஜி - 7' மாநாட்டில் மோடி - டிரம்ப் சந்திப்பதாக இருந்தது. ஆனால், திடீரென கிளம்பிய டிரம்ப், தன் வெள்ளை மாளிகையில், இரவு விருந்திற்கு மோடியை அழைத்தார்.அதே சமயத்தில், பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீரையும் அதே இரவு விருந்திற்கு அழைத்திருந்தார் டிரம்ப். இதனால், அந்த அழைப்பை மறுத்துவிட்டார் மோடி.'இதனால்தான், கோபத்தில் இந்தியா மீது வரிவிதிப்பு என்ற ஏவுகணையை உபயோகித்தார் டிரம்ப்' என, சொல்லப்படுகிறது. இதற்கிடையே, 'டிரம்ப், நான்கு முறை மோடியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்; ஆனால், அந்த அழைப்பை மோடி ஏற்கவில்லை' என, ஜெர்மனியிலிருந்து வெளியாகும் செய்தித்தாள், செய்தி வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Stalin Soundarapandian
செப் 01, 2025 10:09

உங்களை பாராட்டுகிறேன் தன்னைப்போலவே பிறரையும் எண்ணும் உயர்ந்த உள்ளத்திற்காக ரூபாய் எனச் சிலரைப் பற்றி எண்ணும் நீங்கள் எவ்வளவு வாங்குகிறீர்கள்? அதை விட அதிகம் தானே?


கா. ப. நீ சங்கம்
ஆக 31, 2025 19:31

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகள் பித்துக்குளித்தனமானவையாக இருக்கின்றன. கோட் சூட் போட்ட தீவிரவாதி அசிம் முனீருக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் இந்தியாவை எரிச்சலூட்டுவது, வரிவிதிப்பு மூலம் இந்தியாவை பணிய வைக்க முயல்வது, பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து பல்வேறு பொருள்களை இறக்குமதி செய்து வரும் நிலையில் இந்தியாவை மட்டும் குற்றம் சாட்டுவது போன்றவை நமது பாரத பிரதமரை கடுமையான எரிச்சலூட்டி இருக்கக்கூடும். தற்போதைய நடுவண் அரசை கவிழ்க்கவும் முயல்வார்கள்.


ராஜ்
ஆக 31, 2025 14:17

ஏன் விடியல் ஆட்சிக்கு சொல்லலாமே இந்த உபிஸ் பெட்ரோல் வரி குறைக்க சொல்லி மோடி என்ன வீட்டுக்கு கொண்டு போகிறார்


வலியவன்
ஆக 31, 2025 13:10

3 முறை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் இன்னும் காங்கிரஸ் கட்சிய குற்றம் சொல்ல வேண்டியதுதான். பெட்ரோல் நமக்கு விலை குறையல அப்புறம் நீ எங்க வாங்கி என்ன பிரயோஜனம்.


ஆரூர் ரங்
ஆக 31, 2025 14:15

60 வருஷமா குடும்ப ஆட்சில பேஸ்மென்ட்ட வீக்காக்கிட்டு போயிட்டாங்க. சரி செய்யுறது அவ்வளவு ஈசியா?.


Ganapathy
ஆக 31, 2025 20:11

கேனத்தனமான கருத்து.


naadodi
ஆக 31, 2025 20:20

வலியவரே கொஞ்சம் பொருளாதாரத்தில் வலியவராய் இருக்கோணுமுங்க. நாம பெட்ரோல் உற்பத்தி செய்யாத போது மார்க்கெட்ல கெடைக்கிற வெலைக்குத்தேன் வாங்கனுமுங்கோ. உலக முழுக்க பெட்ரோல் வெலை மாறிக்கிட்டே இருந்தாலும் இந்தியாவில மாறாம இருக்குறது அரசு மானியமுங்கோ அறியுங்கோ


அப்பாவி
ஆக 31, 2025 12:54

இன்னிக்கி நண்பரானால் ஒரு கடிதம் தான் காரணம்.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஆக 31, 2025 11:34

யார் என்ன முட்டு கொடுத்தாலும் சிறு குறு தொழில் பாதிப்பு உறுதி. இப்போதே தூத்துக்குடியிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன


ராஜ்
ஆக 31, 2025 14:22

இதனால் அதிகமா பாதிக்க படுவது குஜராத் மட்டும் வைர தொழில் ஏற்றுமதி மட்டுமே 90000 கோடி இதுவே கிட்ட தட்ட ஏற்றுமதியில் 50%


Subburamu K
ஆக 31, 2025 09:34

USA President Trump is not at all a Democrat. He is a modern dictator. All his actions resembles a rowdism. He is more interested in his family business development. Not working for citizens of the country


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 31, 2025 20:59

செரிவூட்டப்பட்ட மோடி காப்பி தான் ட்ரம்ப். ட்ரம்பின் மிடில் சைஸ் தான் மோடி. இருவருமே தங்கள் சொந்த நட்டின் ஜனநாயக அமைப்புகள், மற்றும் தங்கள் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்தி சர்வாதிகாரிகள் போல செயல்படுவது நிதர்சனமாக தெரிகிறதே


R SRINIVASAN
ஆக 31, 2025 08:23

அமெரிக்கா மத்ரும் பிரிட்டன் ,சீனா போன்ற நாடுகள் என்றுமே இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இருந்து வருகிறார்கள் .காரணம் முந்தைய தேசப்பத்ரில்லாத ,கையாலாகாத காங்கிரஸ்தான் இவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்தது .தன்னுடைய சுயநலத்திற்காக நாட்டையே அடகு வாய்த்த பாவிகள். உதாரணத்திற்கு பீகார் முதல்வராக இருந்த ஜெகன்னாத் மிஸ்ரா செய்த அட்டூழியங்கள், ஜலகம் வெண்கல ராவ் ,தேவராஜ் அர்ஸ் போன்றவர்கள் இந்திரா காந்திக்கு கீழ்படியாததால் முதல்வர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள்.


T.Senthilsigamani
ஆக 31, 2025 08:07

நடப்பது மோடி யுகம்


Artist
ஆக 31, 2025 08:07

மோகம் முப்பது நாள் ..பழக பழக பாலும் பெத்து ஆகிவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை