பா.ஜ., பிரசார பயணத்தில் அ.தி.மு.க., பழனிசாமி மிஸ்சிங் ஏன்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தமிழகத்தில், தே.ஜ., கூட்ட ணி ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்குடன், 'தமிழகம் தலைநிமிர தமிழரின் பயணம்' என்ற முழக்கத்துடன், தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், நேற்று முன்தினம் மதுரையில் துவக்கினார். இதில் பங்கேற்க, பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. ஆனால், இருவரும் பங்கேற்கவில்லை. பழனிசாமி வராத நிலையில், அவர் சார்பில், முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார், மதுரை மாவட்ட செயலர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:மதுரையில் நடந்த பிரசார துவக்க விழாவில நட்டா பங்கேற்க வேண்டும் என கேட்டு, நாகேந்திரன் டில்லி சென்று, அவருக்கு அழைப்பு விடுத்தார். அதேபோல், பழனிசாமியையும் அ வரது வீட்டிற்கு சென்று அழைத்தார். இருவரும் வருவதாக உறுதி அளித்தனர். பீஹார் சட்டசபை தேர்தல் பணியால், தன்னால் வர இயலாது என, நட்டா சில நாட்களுக்கு முன் தெரிவித்ததும், அவருக்கு பதிலாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், அவரும் வரவில்லை. மத்திய அமைச்சர் முருகன் மற்றும் கட்சியின் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர். அதேநேரம், அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி அமைந்தால் பா.ஜ.,வை கழற்றிவிடும் முடிவை எடுப்பதற்கு வசதியாக, பழனிசாமியும் துவக்க விழாவிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -