உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மகனுக்கு பொறுப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் பதில்

மகனுக்கு பொறுப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் பதில்

சென்னை: தமிழக பா.ஜ.,வில் வழக்கறிஞர், மருத்துவம் உட்பட 25 பிரிவுகளுக்கு, மாநில அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக, ஸ்ரீ நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன்.

இந்நிலையில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி:

அ.தி.மு.க.வி.,ன் உட்கட்சி பிரச்னைகளை, அவர்கள் தான் பேசி தீர்க்க வேண்டும் என, கூட்டணி முடிவு செய்த அன்றே, உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக சொல்லிவிட்டார். என் மகன் நயினார் பாலாஜி, ஏற்கனவே பா.ஜ., இளைஞரணி, மாநில துணைத் தலைவராக இருந்தார். அதன் அடிப்படையில், அவருக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வில் முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு, பல பொறுப்புகளில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. அதற்குள் பல நிகழ்வுகள் நடக்கும். அதன் அடிப்படையை வைத்து தான், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கணக்கிட முடியும். தமிழக பா.ஜ.,வில் கோஷ்டி என்பது கிடையாது. சமூக நீதி குறித்து பேசும் எல்லா உரிமையும், பா.ஜ.,வுக்கு உள்ளது. திரவுபதி முர்மு, அப்துல் கலாம் உள்ளிட்டவர்களை, குடியரசு தலைவர்களாக நியமித்தது பா.ஜ., தான். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மூழ்கக் கூடிய கப்பல் இல்லை; வரும் 2026ல் தமிழகத்தில் பறக்கக்கூடிய ஜெட் விமானம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
செப் 06, 2025 07:21

மகனுக்கு பொறுப்பு வரணும்கரதுக்காக பொறுப்பான பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது தப்பா? பொறுப்புடன் பேசுங்க.


D Natarajan
செப் 06, 2025 06:15

எங்குமே வாரிசு அரசியல் தான். பிஜேபி உட்பட


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை