உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., ஒருங்கிணையுமா? 2026 சட்டசபை தேர்தலுக்கு குறி!

அ.தி.மு.க., ஒருங்கிணையுமா? 2026 சட்டசபை தேர்தலுக்கு குறி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியில், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் பெங்களூரு புகழேந்தி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இம்முயற்சியை ஆதரிப்போரை மாவட்ட வாரியாக திரட்டி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில், தனி அமைப்பாக செயல்பட்டு வருகின்றனர்.அந்த குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டலில், இன்று மாலை நடக்கிறது. அதில் சட்டசபை தொகுதிக்கு இரு பிரதிநிதிகள் வீதம் பங்கேற்க உள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்த்து, அ.தி.மு.க.,வை ஒருங்கிணைத்து, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது தான் இக்குழுவின் நோக்கம். அதை வலியுறுத்தி, இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். இக்குழுவின் முயற்சிக்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பது, இன்றைய கூட்டத்தில் பங்கேற்போர் வாயிலாக அறிய முடியும் என்கிறது, அ.தி.மு.க., வட்டாரம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Krishnan G
அக் 07, 2024 21:48

விஜய் இன் தவெக, நாம் தமிழர், பாஜக அணியுடன் அமமுகவும் ஒபிஸ் உம் தவிர எடப்பாடி அதிமுக ஆக நான்கு அணிகள் ஒருவருக்கு ஒருவர் இணையாமல் திமுக வை எதிர்த்து அரசியல் செய்தால், திமுக வே வெல்லும். அதையே எடப்பாடியும் விரும்புவதாக தெரிகிறது. என்ன இரகசியம்? ஏதும் மறைமுக ஒப்பந்தம் இருக்குமோ? எடப்பாடி அதிமுக உடைந்து பாஜக உடன் கூட்டணி காண வாய்ப்பு உள்ளது.


Rangarajan Cv
அக் 07, 2024 10:50

If they do not unite ADMK will be completely wiped out. Cadres should force the issue. Will they?


Govinda raju
அக் 07, 2024 04:40

இதில் குறிபிடபட்டுள்ள முன்னாள் எல்லாம் பூஜ்யம் எடுபடாது EPS சிறப்பு


ராமகிருஷ்ணன்
அக் 07, 2024 03:48

மன்னார்குடி மாபியா கும்பல் தவிர மற்றவர்கள் ஒன்னு சேர்ந்து செத்து கொண்டுள்ள அதிமுகவை பிழைக்க வைக்க முயற்சி செய்யலாம். எடப்பாடி ஒத்துழைப்பு தரமாட்டார்.


A Viswanathan
அக் 07, 2024 09:56

ஒருங்கிணைந்து பிஜேபியுடன் கூட்டு வைத்து இப்போது உள்ள ஆட்சியை அகற்ற வேண்டும்.


புதிய வீடியோ