உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மசூத் அசார், ஹபீஸ் சயீத் ஒப்படைக்கப்படுவார்களா? இந்திய - பாக்., பதட்டம் நீங்க தற்காலிக தீர்வு

மசூத் அசார், ஹபீஸ் சயீத் ஒப்படைக்கப்படுவார்களா? இந்திய - பாக்., பதட்டம் நீங்க தற்காலிக தீர்வு

பயங்கரவாதிகளின் புகலிடமான பாகிஸ்தான் உள்ளது. சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்தபோது தான், அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான, தாவூத் இப்ராஹிமுக்கு பாக்., தஞ்சம் அளித்தது. 2008ல், மும்பை தாக்குதல், தற்போது பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத், பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார்.வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று, தற்போது பாக்., நீதிமன்ற உத்தரவின்படி சிறை வைக்கப்பட்டுள்ளார். ஆனால், வீட்டையே சப்-ஜெயிலாக மாற்றி, ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.இதேபோல், இந்திய பார்லிமென்ட் தாக்குதல், உரி, பதான்கோட் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத் அசார், பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக பதுங்கி வாழ்ந்து வருகிறார். கடந்த 7ம் தேதி அதிகாலை, பாகிஸ்தான் பகவல்பூரில் இந்தியா நடத்திய தாக்குதலில், மசூத் அசார் உறவினர்கள், கூட்டாளிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இதில் மசூத் அசார் மட்டும் தப்பி உள்ளார்.கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில், பாக்., ராணுவ அதிகாரிகள் சீருடையுடன் பங்கேற்று, 'ராயல் சல்யூட்' செய்தது, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. பாக்., அரசும், ராணுவமும் பயங்கரவாதிகளுக்கு எத்தகைய ராஜ மரியாதை அளிக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே பெரிய உதாரணம்.நமது நாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு காரணமான, சர்வதேச பயங்கரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ் சயீத் ஆகிய இரண்டு பயங்கரவாதிகளையும், பாகிஸ்தான் ஒப்படைத்தால், தற்போதைய பதட்டமான சூழலுக்கு தீர்வு கிடைக்கும். சமாதான நடவடிக்கைக்கான பேச்சு துவங்குவதாக இருந்தால், இதுவே இந்தியாவின் முக்கிய கோரிக்கையாக இருக்கும்.போர் நிறுத்தம்இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Anbuselvan
மே 14, 2025 13:45

மற்ற கீழ் மட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களது ஈம சடங்கிற்கு ராணுவ மரியாதை தரும் நாட்டிலிருந்து இதை எதிர்பார்ப்பதே தவறு. இந்த விருப்பத்தை ஏட்டில் வேணுமெனில் எழுதலாம் கறிக்கு உதவாது.


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 11, 2025 10:33

யார் யாரையோ போட்டுத்தள்ளியதாக சொல்கிறார்கள் இவர்களை ஒப்படைக்க சொல்லி கெஞ்சுகிறார்களே ஏன்? அவரகள் மறைவிடத்தை விட்டு வைத்தது ஏனோ? பாக்குக்கு நியாய தர்மம் பார்க்க வேண்டியதில்லை.


chandramouli mouli
மே 11, 2025 09:50

ஒப்படைத்து என்ன பிரோஜானம்....எங்கள் காசில் அவுங்களுக்கு 10 வருடம் 20 வருடம் கேஸ் நடத்தி பிறகு அவர்கள் அப்பீல் செய்து வெளியே வந்து விடுவார்கள்


Balaji Bakthavathsal
மே 11, 2025 08:20

ஒப்படைத்து என்ன பயன்? நமது நீதி மன்றம் உடனேவா தீர்ப்பு வழங்கப்போகின்றது அவனை சிறையில் அடைப்பதாக கூறி, அவனுக்கு நல்ல கறி சோறு போட்டு வளர்ப்பார்கள். சிறிது நாட்களுக்குப்பிறகு வேறொரு தீவிரவாதி அப்பாவி மக்களை பிணையமாக வைத்துக்கொண்டு அவனை விடுவிக்கச்சொல்லி மிரட்டுவார்கள். நமது அரசாங்கமும் நிபந்தனையின்றி விடுவித்துவிடும். இதுதான் காலம்காலமாக நடக்கின்றதே


Shankar M
மே 11, 2025 00:41

பாகிஸ்தானை வேர்ல்ட் மாப்பிள் இருந்து தூக்க வேண்டும் ...


ஆரூர் ரங்
மே 10, 2025 18:30

ஒரு பயங்கரவாதியைக் கூட ஒப்படைக்க மாட்டார்கள். ஏனெனில் பாக் ராணுவத்தில் பயிற்சி பெற்று பணி செய்தவர்கள்தான் பயங்கரவாதிகளாக அனுப்பப்படுகின்றனர். ஆக ராணுவமே பயங்கரவாத குழுதான். பேச்சுவார்த்தையில் பலனிருக்காது. பின் லேடன் அழிப்பு நிகழ்வுக்குப் பிறகும் பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்றது பயங்கரவாத தூண்டுதல்தான். பெரியண்ணன் ஆயுத வணிகத்தைக் காப்பாற்றுவது நமது வேலையா?


angbu ganesh
மே 10, 2025 16:10

பாக்கிஸ்தான் எடத்துல புல் பூண்டு கூட முளைக்க கூடாது


RAMAKRISHNAN NATESAN
மே 10, 2025 15:11

அந்நாட்டு தளபதி ஆஸிம் முனிரின் டலை வேணும் .....


தேச நேசன்
மே 10, 2025 14:41

தாவூத் இப்ராஹீமயையும் சேர்த்து ஒப்படைக்க வேண்டும்


naranam
மே 10, 2025 13:58

எந்த ஒரு ஒப்பந்தமும் வேண்டாம். தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டியது அவர்கள் கடமை. அதைவிட ஆக்கிரமிப்புக் காஷ்மீரை நம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடலாமே!


முக்கிய வீடியோ