உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பீஹாரில் பேசிய கருத்துகளை தமிழகத்தில் பேசுவாரா மோடி?

பீஹாரில் பேசிய கருத்துகளை தமிழகத்தில் பேசுவாரா மோடி?

தர்மபுரி: ''பீஹாரில் மோடி பேசிய கருத்தை, தமிழகத்தில் வந்து பேச முடியுமா; பேசக்கூடிய தைரியம் தான் இருக்கிறதா,'' என, முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தர்மபுரி தொகுதி தி.மு.க., - எம்.பி., மணி இல்ல திருமண விழா, தர்மபுரி அருகே ஆட்டுகாரம்பட்டியில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலை அடிப்படையாக வைத்து, வாக்காளர் பட்டியலில், எஸ்.ஐ.ஆர்., என்ற திட்டத்தின் வாயிலாக, சீராய்வு பெயரில் சதிசெயலை செய்ய, தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. அதை தடுப்பதற்காக, சென்னையில், அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். நாம் நடத்திய கூட்டத்துக்கு தமிழக எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மற்றும் ஓரிரு கட்சிகள் பங்கேற்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முழுமையான திருத்தப்பணி செய்ய நினைப்பதற்கு காரணம், உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம். இதைத்தான், பீஹாரில் செய்தனர்; பிற மாநிலங்களிலும் செய்ய முயற்சிக்கின்றனர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பீஹாரின் தேஜஸ்வி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, இதில் கூட, தன் இரட்டை வேடத்தை காட்டியிருக்கிறார். பா.ஜ.,வுக்கு பயந்து, தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்க்க பயப்படுகிறார். அதே சமயம் கட்சி தொண்டர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுஉள்ளார். அவருக்கு, தேர்தல் ஆணைய நடவடிக்கையில், சந்தேகம் இருப்பதையே அந்த அறிக்கை காட்டுகிறது. அவரால் வெளிப்படையாக இதை எதிர்க்க முடியவில்லை. பா.ஜ., எப்படிப்பட்ட சதிச்செயலை செய்தாலும், தமிழகத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தை சுட்டிக்காட்டி பீஹாரில் வெறுப்பு கருத்துகளை பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ஓட்டு அரசியலுக்காக நாடகம் நடத்தியிருக்கிறார். அங்கு, அவர் பேசிய அதே கருத்துகளை தமிழகத்தில் வந்து பேச முடியுமா; அல்லது பேசக்கூடிய தைரியம்தான் இருக்கிறதா? யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதுாறு பரப்பினாலும், எவ்வளவு போலி செய்திகளை உருவாக்கினாலும், 2026 தேர்தலில் ஏழாவது முறையாக தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ஆரூர் ரங்
நவ 04, 2025 18:52

பொன்முடி இங்கு சைவம் வைணவம் பற்றிப் பேசியதை வட மாநிலங்களில் பேசிக் காட்டட்டும்.


Ram RV
நவ 04, 2025 17:23

நீங்கள் தமிழகத்தில் பேசுவதை பீகாரில் பேசுவீர்களா?


sengalipuram
நவ 04, 2025 16:45

கல்வின் முக்கியத்துவம் இப்போது தான் புரிகிறது . நன்கு படித்த ஒருவரால் இப்படியெல்லாம் பேச இயலாது . ஒரு முதல் அமைச்சர் சவால் விட்டு பேசுவது ரோட்டில் மது அருந்தியவர் பேசுவது போல் இருக்கிறது .


Suppan
நவ 04, 2025 16:42

மோதி தமிழகத்துக்கு வந்து திமுககாரங்கள் பீஹாரிகளைப்பற்றி மட்டரகமாகப்பேசினார்கள் என்று சொல்வார். விடியலால் ஒன்றும் செய்யமுடியாது. வெட்கித்தலை குனிய வேண்டும். திராவிடியன் ஸ்டாக்குக்கு வெட்கம் மானம் சூடு சொரணை என்று எதுவும் கிடையாது மட்டரகமாகப்பேசிய உங்களுடைய மந்திரிமார்களையும் , பாராளுமன்ற அங்கத்தினர்களையும் கண்டிக்க விடியலுக்கு துப்பு இருக்கிறதா ? தைரியம் இருக்கிறதா? அவர்களில் யாராவது ஒரு ஆசாமி பிஹாருக்கு என்று அதே வார்த்தைகளை உதிர்க்க தைரியம் உள்ளதா?


SUBBU,MADURAI
நவ 04, 2025 14:37

தமிழகத்தில் பேசிய கருத்துக்களை பீகாரில் பேசுவாரா ஸ்டாலின்?


ஆரூர் ரங்
நவ 04, 2025 14:37

நெல் கொள்முதல் நிலையங்களில் சுமை தூக்கும் ஊழியர்கள் இல்லாமல் கடும் பற்றாக்குறை. கொள்முதல் பாதிப்பு. முதல்வருக்கும் கொளமுதலுக்கும் வெகுதூரம்.


Rajasekar Jayaraman
நவ 04, 2025 13:26

பேசிவிட்டால் என்னசெய்வாரோ


krishna
நவ 04, 2025 13:15

IDHU ENNA KEVALA LOGIC..


கௌதம்
நவ 04, 2025 09:49

நீங்களும் உங்க உ.பி க்களும் இங்க பேசியதை எல்லாம் பீகார் சென்றபோது பேசி இருக்கலாமே...


ராஜ்
நவ 04, 2025 08:44

பதிவு திருமணம் செய்ய வேண்டியது தானே அப்பறோம் எதுக்கு இந்த மாதிரி கல்யாணம் இது தான் பகுத்து அறிவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை