உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வரும் சனிக்கிழமை பத்திரப்பதிவு நடக்குமா?

வரும் சனிக்கிழமை பத்திரப்பதிவு நடக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளி விடுமுறை காரணமாக, வரும் சனிக்கிழமை, 100 சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் அதிக பத்திரங்கள் பதிவாகும், 100 சார் - பதிவாளர் அலுவலகங்கள், சனிக் கிழமையும் செயல்படும் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, 100 சார் பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமைகளில் முழுநேரமும் செயல்படுவது உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளியூர் செல்வோரின் வசதிக்காக, நவ., 1 அதாவது வெள்ளிக் கிழமை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. இதனால், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு, இந்த வாரம் மட்டும் சனிக்கிழமை அதாவது, நவ., 2ல் விடுப்பு அளிக்க வேண்டும் என, பதிவுத் துறை சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கை தொடர்பாக, பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து உரிய பதில் எதுவும் வரவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை பத்திரப்பதிவு செய்வதற்கு பொது மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான, 'டோக்கன்'கள் வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. பதிவுத் துறை தலைமையிடம் இருந்து விடுமுறை அறிவிப்பு வராத நிலையில், சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு விண்ணப்பிக்கலாமா என்பதில், பெரும்பாலான மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ