உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூச்சல் குழப்பம் கொண்ட ராஜ்யசபா: எப்படி சமாளிப்பார் சிபிஆர்?

கூச்சல் குழப்பம் கொண்ட ராஜ்யசபா: எப்படி சமாளிப்பார் சிபிஆர்?

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ., கூட்டணிக்கு பார்லிமென்டில் பலம் இருப்பதால், ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆர்.எஸ்.எஸ்.,சை பின்புலமாக கொண்ட ராதாகிருஷ்ணன், அனைவருடனும் நட்பாக பழக்கக்கூடியவர்; அதிர்ந்து பேசாதவர்; மிகவும் மென்மையானவர்.'இப்படிப்பட்டவரால் கூச்சலும், குழப்பமுமாக உள்ள ராஜ்யசபாவை நிர்வகிக்க முடியுமா?' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. துணை ஜனாதிபதி பதவியில் இருப்பவர் தான், ராஜ்யசபாவின் தலைவர்; அவர்தான் சபையை வழிநடத்துவார்; லோக்சபாவில் சபாநாயகர் போல, ராஜ்யசபாவின் தலைவர் துணை ஜனாதிபதி.பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, தினமும் ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்பி, சபைகளை நடக்கவிடாமல் செய்து வருகின்றன எதிர்க்கட்சிகள். இந்நிலையில், ராஜ்யசபாவின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள ராதாகிருஷ்ணன் எப்படி சமாளிக்கப் போகிறார்? மேலும், இவருக்கு ஹிந்தியும் ஒரு பிரச்னை; அதாவது, சரளமாக ஹிந்தியில் பேசுவாரா?ராஜ்யசபாவின் துணை தலைவராக இருப்பவர், ஹரிவன்ஷ் நாராயண் சிங். பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் கட்சியைச் சேர்ந்த இவர், சிறந்த பத்திரிகையாளராக வாழ்க்கையை துவங்கி அரசியல்வாதியானவர்; அத்துடன், ஒரு எழுத்தாளரும் கூட. ராஜ்யசபாவின் தலைவர் துணை ஜனாதிபதியாக இருந்தாலும், அதிகமாக சபையை இவர்தான் திறம்பட நடத்தி வருகிறார்.எனவே, 'ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியான பின், ஒரு சில நேரம்-, அதாவது, கேள்வி நேரத்தின்போது சபையை நடத்துவார். மற்ற பிரச்னைக்குரிய சமயங்களில், துணை தலைவர் சிங்தான் சபையை நிர்வகிப்பார்' என, சொல்லப்படுகிறது.'முக்கியமான சமயங்களில், அதாவது, பிரதமர் ராஜ்ய சபாவில் பதில் அளிக்கும் சமயங்களில், ராதாகிருஷ்ணன் சபையை நடத்துவார்' என, சொல்லப்படுகிறது. எது எப்படியோ... துணை ஜனாதிபதி பதவியில் அமரப் போகும் இவருக்கு, ராஜ்யசபாவை வழிநடத்துவது பெரும் பிரச்னையாகவே இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ராஜா
ஆக 25, 2025 05:42

கூடா நட்பு கேடாய் முடியும்


Tamilan
ஆக 24, 2025 23:14

மோடி பதிவுசெய்த ரேடியோவை சேருக்கு பின்னால் வைத்துக் கொள்ள வேண்டியது தான்.தன் மாயை மூடிக்கொண்டு அதை ON செய்துவிட வேண்டியது தான் .


ManiMurugan Murugan
ஆக 24, 2025 23:00

பாராளுமன்றத்தின் செயல்பாட்டைக் கெடுப்பதே மக்கள் நலனை விரும்பாத அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி தான் ஆதலால் ஒன்றும் சிரமம் இல்லை


bala
ஆக 24, 2025 19:14

இதுக்கு தான் ஹிந்தி படிக்கணும்.. திராவிட கட்சிகள் எங்க படிக்க விட்டாங்க


RRR
ஆக 24, 2025 18:28

டம்மி பீஸ் போதும்னுதானே இவரை தேர்ந்தெடுத்திருக்காங்க... ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு பொருத்தமான புள்ளைப்பூச்சி...


Saai Sundharamurthy AVK
ஆக 24, 2025 16:45

எதிர்கட்சிகளை சமாளிக்க வேண்டும் என்றால் இவர் ஆங்கிலத்தில் பேசி விட வேண்டும். அவர்களுக்கு ஹிந்தியைத் தவிர எந்த மொழியும் தெரியாது. ஆகவே ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் எல்லோரும் ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்து கொண்டு ஆங்கிலம் புரிந்தது போல் சிந்தனையில் ஆழ்ந்து அமைதியாகி விடுவார்கள். ஸ்டாலினார் வெளிநாட்டுக்கு போனால் எந்த மொழியில் பேசுவார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.... எதிராளி நிச்சயம் ஆங்கிலத்தில் தான் பேசுவார். இவரும் எல்லாம் புரிந்தது போன்று பாவலா செய்து அமைதியாக பல்லைக் காட்டிக் கொண்டிருப்பார் தானே !!!!! இவர் மாதிரி தான் ஹிந்தி பேசும் எதிர்கட்சியினரும்.... !!!!!


Arul Narayanan
ஆக 24, 2025 14:19

அவருக்கு ஹிந்தி தெரியாது என்பதால் ஹிந்தியில் கூச்சல் போட்டால் வேஸ்ட். ஆங்கிலத்தில் கூச்சல் போட முடியாது. சபை அமைதியாக நடக்கும்.


venugopal s
ஆக 24, 2025 13:01

மொத்தத்தில் பாஜக அவரை ராஜ்ய சபாவில் டம்மியாக உட்கார வைக்கப் போகிறது! எதிர்பார்த்தது தான்!


vivek
ஆக 24, 2025 15:40

வேணு அப்போ திமுக சாபோர்ட் பண்ணுது


Sangi Mangi
ஆக 24, 2025 11:47

துண்டை காணோம், துணிய காணோம் அய்யோ அம்மா... அய்யோ அம்மா...


vivek
ஆக 24, 2025 12:56

அய்யோ சட்டை கிழிச்சியாங்க...கட்டுமரம் கதறல்


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2025 16:21

ஐயோ கொல்லுறாங்களே என்றா டப்பிங் வாய்ஸ் போலவா


subramanian
ஆக 24, 2025 11:35

யாருக்கும் சளைத்தவர் அல்ல நமது சிபிஆர்


முக்கிய வீடியோ