உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தென் மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடம் குறையும்?

தென் மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடம் குறையும்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை முடிந்துள்ளதால், தென் மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம், 30 நிமிடங்கள் வரை குறைக்கப்பட உள்ளது. தமிழகத்தின் ரயில்வே கனவு திட்டமான, சென்னை எழும்பூர் -- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை பணி, 1998ல் துவங்கி, 2021ல் மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மதுரை -- திருநெல்வேலி -- நாகர்கோவில் -- கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணி, கடந்த ஆண்டு இறுதியில் முடிக்கப்பட்டது. இதனால், தென் மாவட்ட விரைவு ரயில்களின் தாமதம் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கூடுதல் ரயில்கள் இயக்கம், பயண நேரம் குறைப்பு போன்ற அறிவிப்புகளை, இன்னும் தெற்கு ரயில்வே வெளியிடவில்லை.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேக்கான புதிய கால அட்டவணை தயாரிப்பு பணியை துவங்கி உள்ளோம். கூடுதல் ரயில்கள் இயக்கம், ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் குறித்து, பயணியர் சங்கங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் அளித்துள்ளனர். இந்த மனுக்கள் குறித்து, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, புதிய கால அட்டவணையில் அறிவிப்புகள் வெளியிடப்படும். குறிப்பாக, தென் மாவட்ட இரட்டை பாதையில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதால், ரயில்களின் வேகம் சற்று அதிகரிக்கப்படும். இதனால், பயண நேரம், 30 நிமிடங்கள் வரை குறையும். இதற்கான அறிவிப்பு, ஜூலையில் வெளியிடவுள்ள புதிய கால அட்டவணையில் இடம்பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R K Raman
மே 16, 2025 11:28

விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டைப் பாதை மட்டும் ஒன்றும் நடக்கவில்லை


Shankar
மே 15, 2025 19:47

ஓசியில் ஆயிரம் ரூபாய்...ஓசியில் மின்சாரம்... ஓசியில் வண்டி ஹாரன் சத்தம்...


Krithisha
மே 15, 2025 16:22

அது மட்டும் இல்லை அண்ணா அனைத்து ரயில்களும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்


அப்பாவி
மே 15, 2025 10:00

போறும்டா வேகம். ராக்போர்ட் எக்ஸ்பிரசில் ராத்திரி 11 மணிக்கு ஏத்தி, விடிகாலை மூணு மணிக்கு சென்னலை எறக்கி உட்டா, வெளில பஸ் கிடையாது. ஸ்டேஷன்லேயே கொட்டடா கொடையடான்னு உக்காந்திருக்க வேண்டியிருக்கு. சரியா தூக்கம் இல்லை. முன்னாடியெல்லாம் ராத்திரி ஒன்பது மணிக்கு ஏறினால், விடிகாலை அஞ்சரை மணிக்கு மாம்பலம். ஒரு காபி சாப்புட்டு நடந்தே வீட்டிற்கு போயிடலாம்.


Venkatesan S
மே 15, 2025 11:58

ராக்போர்ட் 7.30 மணிக்கு கிளம்பர மாதிரி மாற்றினால் நன்றாக இருக்கும்


RAAJ68
மே 15, 2025 08:41

WAP4 என்று எழுதியுள்ளது ENGINEல். அதாவது Wide (broad gauge) A is alternate current. P means Passenger. 4 என்பது மாடல் டைப். 24 பேசஞ்சர் பெட்டிகளை 140 கிலோ மீட்டர் வேகத்தில் இழுத்துச் செல்லக்கூடிய திறன் கொண்டது WAP4 Engine.


முக்கிய வீடியோ