உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தக் லைப் படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல்: விஜய் படத்துக்கு நெருக்கடி கொடுக்கப்படுமா?

தக் லைப் படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல்: விஜய் படத்துக்கு நெருக்கடி கொடுக்கப்படுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழகத்தில், ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டின் போது சிக்கல் ஏற்படுத்த இப்போதே திட்டமிடுகின்றனர். தக் லைப் இசை வெளியிட்டு விழாவின்போது பேசிய நடிகர் கமல், 'தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' என்றார். இது கர்நாடகாவில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. நடிகர் கமல் மன்னிப்பு கேட்கும் வரை, தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என, அரசியல் கட்சித் தலைவர்களும், கன்னட மொழி ஆர்வலர்களும் சூளுரைத்தனர். இதையடுத்து, படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. விவகாரம் அம்மாநில உயர் நீதிமன்றத்துக்கு சென்றது. அங்கும், நடிகர் கமலை மன்னிப்பு கேட்க வலியுறுத்தவே, படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியவில்லை.கர்நாடக பிலிம் சேம்பருக்கு, நடிகர் கமல் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்த பின்பும், அங்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளதால், இவ்விஷயத்தில் அடுத்து என்ன செய்வது என புரியாமல் பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்தாரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்தப் படத்துக்கு, தமிழகத்தில் சிக்கல் ஏற்படுமோ என்ற பதற்றம் தமிழ் திரையுலகில் ஏற்பட்டுள்ளது.அந்த படத்துக்கு எப்படி பிரச்னை ஏற்படும் என கேட்டால், தமிழ் திரையுலகில் விநோத காரணம் சொல்கின்றனர். தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: நடிகர் விஜயின், 69வது படம் ஜனநாயகன். இப்படத்தை தயாரித்து வரும் கே.வி.என்., புரொடெக்ஷன், கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம்.கன்னட மொழி குறித்து நடிகர் கமலின் பேச்சுக்குப் பின், தக் லைப் திரைப்படம், கர்நாடகாவில் வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெங்களூரை களமாக கொண்ட ஒரு திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் தமிழில் தயாரிக்கும் படத்தை, தமிழகத்தில் வெளியிடலாமா என, இப்போதே சிலர் சர்ச்சை கிளப்பத் துவங்கி விட்டனர். இந்த சர்ச்சைக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.கூடவே, நடிகர் விஜய்க்கு எதிராக இருக்கும் அரசியல் கட்சியினரும், இந்த சர்ச்சையை பெரிதாக்க முயல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'இப்படியொரு சர்ச்சையை கிளப்பி யார் அரசியல் செய்ய நினைத்தாலும், அது அவர்களுக்கு எதிராகப் போய் முடியும். அப்படி நடந்தால், அரசியல் ரீதியில் அதை தனக்கு சாதகமாக திருப்ப, விஜய் தரப்பிலும் சில யோசனைகள் உள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

JANA VEL
ஜூன் 07, 2025 15:18

பரவாயில்லையே... கமலை மாதிரியே கமெண்ட் எழுதுறீங்க. என்ன சொல்லறீங்க சொல்ல வரீரிங்க என்று கடைசிவரை புரியல்ல


திருட்டு திராவிடன்
ஜூன் 06, 2025 12:35

இந்த நா...கூத்தாடி பயல்கள் எல்லாம் இப்படி அரசியலில் வந்து கெடுத்து குட்டிசுவராக்குகிறார்கள்.


Madhavan
ஜூன் 06, 2025 10:42

கலை என்பது உலகப் பொது மொழி.. அதற்கு எல்லைகள் கிடையாது.. பரிணாமம் விரிந்து கொண்டே போகும்..ஒரு சினிமாவை அதில் பேசும் கதாபாத்திரங்கள் பேசும் மொழி புரியாவிட்டாலும் நம்மால் ரசிக்க முடியும்..தற்போது சப் டைட்டில்கள் பெருமளவுக்கு உபயோகமாகிறது.. சிறந்த படங்கள் தமிழிலும் அவ்வப்போது வருகின்றன.. நாயகன், ரோஜா, பம்பாய் போன்ற படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். இதனை இயக்கிய மணி ரத்னம் தமிழ் இயக்குனர்களில் தனித்துத் தெரிகிறார். இவரும் கமல்ஹாசன் கலை என்பது உலகப் பொது மொழி.. அதற்கு எல்லைகள் கிடையாது.. பரிணாமம் விரிந்து கொண்டே போகும்..ஒரு சினிமாவை அதில் பேசும் கதாபாத்திரங்கள் பேசும் மொழி புரியாவிட்டாலும் நம்மால் ரசிக்க முடியும்..தற்போது ச்ப் டைட்டில்கள் பெருமளவுக்கு உபயோகமாகிறது.. சிறந்த படங்கள் தமிழிலும் அவ்வப்போது வருகின்றன.. நாயகன், ரோஜா, பம்பாய் போன்ற படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். இதனை இயக்கிய மணி ரத்னம் தமிழ் இயக்குனர்களில் தனித்துத் தெரிகிறார். இவரும் கமல்ஹாசன் அவர்களும் இனைந்து வழங்கிய நாயகன் பெரிதும் வெற்றி பெற்றது. இத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளி வந்த தி காட் ஃஃபாதர்படத்திலிருந்துதான் தோன்றியது. கமல் ஹாசன் அவர்களும் மணி ரத்னம் அவர்களும் ஒரே குடும்பத்தினர். மணி ரத்னம அவர்களின் மனைவிக்கு கமல் ஹாசன் அவர்கள் சித்தப்பா முறையாவார். எனவே, நாயகனிலிருந்து தோன்றியதுதான் தக் லைஃப். தக் லைஃப் படத்தின் அடி நாதமாக‌ ஆங்கிலப் படமான தி காட் ஃஃபாதர் விளங்குகிறது என்பதை சினிமா உலகமே அறியும். தற்போது வெளியாகியுள்ள தக் லைஃப் மூதாதையர் போல சிறப்பாக இல்லை என சிலர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். அது சரி..... ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் அதுவும் 38 வருட இடைவெளியில் பிறந்தவர்கள் ஒரே மாதிரியாக இல்லை என்பதில் வியப்பேதுமில்லை.


angbu ganesh
ஜூன் 06, 2025 09:35

இவன் படம் ஓடினாலும் ஓடைகளும் 500 கோடி CONFIRM என்ன எங்க இருந்தோ வர கருப்பு பணத்தை இவன் வசூல்ன்னு காட்டி வெள்ளைய காட்டிடறான் ஆகா மொத்தம் THEATERUKKU நஷ்டம் இல்ல தயாரிப்பாளர்னு யாரையோ சொல்லி விஜய்தான் படம் தயாரிக்கறான் சோ நோ பயம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 06, 2025 08:18

சாப்பாடு சாராயம் சினிமா பாலியல் வன்கொடுமைகள் மனித கொலைகள் இதற்கெல்லாம் எந்த பிரச்சனையும் வராமல் திராவிட மாடல் அரசு பார்த்து கொள்ளும்.


முக்கிய வீடியோ