உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரதமரின் பெருமிதத்தை தமிழகத்துக்கு பயனுள்ளதாக மாற்றுவாரா விஜய்..: அந்துமணி பதில்கள்

பிரதமரின் பெருமிதத்தை தமிழகத்துக்கு பயனுள்ளதாக மாற்றுவாரா விஜய்..: அந்துமணி பதில்கள்

ஜி.கோகுல கிருஷ்ணன், திருவாரூர்:

'அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளதே?அப்படியே, அவர்களது பார்வைக்கு வரும் கோப்புகளை சரி பார்த்து, கையெழுத்திட எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர் என, மாதந்தோறும் தகவல் சமர்ப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்.

வதிலை. ம.அன்புச்செல்வன், தேனி:

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காமல், யார் என்றே தெரியாத நவநீதம் பிள்ளைக்கு வழங்கி விட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பி தள்ளியிருக்கிறாரே? கடந்த ஆண்டே, வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ என்ற பெண் அரசியல் தலைவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசைத் தட்டிப் பறிக்க முயன்றார் டிரம்ப். மச்சாடோ இதைப் பார்த்து, தன் தாராள குணத்தால், டிரம்ப்புக்கு நோபல் பரிசை அன்பளிப்பாக வழங்கி விட்டார். இந்தாண்டு டிரம்ப், இப்படி ஒரு பொறாமைக் கூத்தை அரங்கேற்றி இருக்கிறார்!

சு.வெண்ணிலா, மதுரை:

'ஐந்து முதல்வர்களுடன் பணியாற்றியுள்ளேன். தமிழகத்திற்கு அனைத்தையும் தருவேன்' என்று, மோடி பெருமிதம்?அவரது பெருமிதத்தை, தமிழகத்திற்கு பயனுள்ளதாக மாற்றுவது இனி தமிழக முதல்வர் விஜய் கையில் தான் உள்ளது; செய்வாரா என பார்க்கலாம்.

ந.கண்ணா, நெல்லை:

'நாம் பேசக்கூடாது நம் செயல்கள் தான் பேச வேண்டும்' என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறி இருப்பதன் அர்த்தம் என்ன?கட்சியினர் அனைவரையும், 'கம்முனு கிட' என கூறுவதன் அர்த்தம்.

க.தன்யா, மும்பை:

ராகுல், ஜனாதிபதியின் மாண்பு குறித்து தெரியாமல், அரசியல் வம்புக்கு இழுக்க தயாராகி விட்டாரே?காங்கிரசை சேர்ந்த ராகுலுக்கு, தன் வரம்பு என்ன என்பதே இன்னும் புரியவில்லை. இதில் ஜனாதிபதியின் மாண்பு எப்படி தெரியும்? இதற்கும் மேலாக, அவர் நாட்டுக்கு எதிராகவும், பெரிய தலைவர்களுக்கு எதிராகவும் பேச, அவரை யாரோ துாண்டி விடுகின்றனரோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

ஆர்.மஞ்சுளா, லண்டன், பிரிட்டன்:

டில்லி பாதுகாப்பு படையினர், ஹிட்லர் போல் நடந்து கொள்வதாக, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி இருப்பது பற்றி? இவர்கள் யாவரும் அமைதி போராட்டமா நடத்துகின்றனர்... காவல் துறையினரை தாக்குவதும், பொது சொத்தை சேதப்படுத்துவதும் என அராஜகம் தானே நடக்கிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Azhagu
அக் 15, 2026 12:04

முதல்வர் விஜயை முதலில் ஒரு ப்ரஸ் மீட் நடத்த சொல்லுங்கள்..


Senthamizhsudar
அக் 15, 2026 11:24

விஜய் ராஜ்மோகன் வில்சன் போன்ற சொம்புகள் வாயை மூடி வைத்தால் நல்லது


Anantharaman Srinivasan
அக் 14, 2026 19:00

எல்லா பதில்களையும் வாசகர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...


Mohan
அக் 14, 2026 13:46

பயனுள்ளதாக மாற்ற அவருக்கு கீழே உள்ள அமைச்சர்கள் விடுவாங்களா?. இந்த ராஜ் மோகன்னு ஒருத்தர் இருக்காரே அவர் திமுகவில் இருந்திருக்க வேண்டிய மனிதர். தீய சக்திகளின் உருப்படாத இரண்டு மொழி கொள்கையை தூக்கிப் பிடிக்கும் இந்த வெளி நாட்டு மனிதர்,, தவெக அமைச்சரவை ஒப்பதல் பெறாமல் இஷ்டத்துக்கு அடித்து விடுகிறார். பல வருடங்களாக தொங்கலில் உள்ள இந்த இரண்டு மொழி கொள்கை தங்களுக்கு வேண்டுமா அல்லது மூன்று மொழி கொள்கை வேண்டுமா என தமிழ் நாட்டின் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு பிறகு முடிவு செய்யட்டும். இதுவரை எவரும் கேட்டதில்லை தமிழகத்தின் பட்டியலின மாணவர்களை அதிகம் படிக்க விடாமல், தமிழக அரசு கீழ்மட்ட பணிகளில் மட்டும் வேலைகள் பெற வைப்பதற்கு


CM Prabhakaran
அக் 14, 2026 12:54

வாசகர்கள் அனைவரும் அறிவாற்றல் படைத்தவர்கள்..


சந்துரு
அக் 14, 2026 08:35

உங்களது பார்வையில் விஜய் போன்றவர்கள் ஏதோ விண்ணுலகில் இருந்து இறங்கி வந்த ஒரு தேவகுமாரன்! எடப்பாடி போன்றவர்கள் கிண்டலும், கேலியும் செய்யத்தகுந்த, கம்முனு கிடக்கும் சாதாரணமான மனிதர்கள் அப்படித்தானே அந்துமணி சார்?


Sun
அக் 14, 2026 08:27

பிரதமரின் பெருமிதத்தை தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்துவேன் என்பதைத்தான் பரந்தூரில் விளக்கமாக காட்டி விட்டாரே விஜய்? இன்னுமா சந்தேகம்?


என் ஏ அரவழகன்
அக் 14, 2026 06:08

உலக அமைதிக்கு பாடுபடுகிறேன் உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரவில்லை வேதனைப்படுவது சுத்தமான ..கோமாளிதனம்


கிஜன்
அக் 14, 2026 05:54

கலைஞர் அவர்கள், தனது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில் இந்தியாவின் 14 பிரதமர்களுடன் நெருங்கிப் பணியாற்றியுள்ளார்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 14, 2026 08:59

14 பிரதமர்களுடன் பணியாற்றியது அம்மாஞ்சல்லிக்கு பிரியோஜனம் இல்லையே..... அவர் பணியாற்றியது தன் குடும்பத்தையும் தன் கட்சியையும் மேம்படுத்தவே அன்றி தமிழகத்திற்கும், தமிழகமக்களுக்கும் இல்லையே.....!!!


thiru
அக் 14, 2026 13:26

கிஜன் அதுக்கு என்ன இப்போ...தலைப்புக்கு தகுந்த கருத்து போடு...


புதிய வீடியோ