உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கைக்கு எட்டியது... வாய்க்கு எட்டுமா... பொங்கலுக்குள் போனஸ் கிடைக்குமா?

கைக்கு எட்டியது... வாய்க்கு எட்டுமா... பொங்கலுக்குள் போனஸ் கிடைக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பில் போடுவதில் நிலவும் தாமதத்தால் தமிழக அரசு அறிவித்த போனஸ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கலுக்குள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது. அரசாணையின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மனித வள மேலாண்மை இணையதளத்தில் களஞ்சியம் 2.0 என்ற முகவரியில் இருந்து தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பள பில் உட்பட அனைத்து பணப்பலன்களும் வழங்கப்படும்.இந்நிலையில் நேற்று வரை (ஜன., 7) களஞ்சியம் ஆப்பில் பொங்கல் போனசுக்கான பில் ஜெனரேட்டாகவில்லை. இதன் காரணமாக அப்படியே இன்று (ஜன., 8) ஜெனரேட் ஆனாலும் கூட ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் களஞ்சியம் ஆப்பில் ஏற்றும் போது சர்வர் சரியாக செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் இன்னும் இரண்டு வேலை நாட்களான வியாழன், வெள்ளியில் பொங்கல் போனஸ் பில் போடப்பட்டு அதற்கான ஒப்புதல் கருவூலம் வழங்கிய பிறகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வங்கி கணக்கில் ஏற்றப்படும். சனிக்கிழமை முதல் கருவூலம், வங்கிகளுக்கு அரசு விடுமுறை.திங்கட்கிழமை (ஜன.,13) அரசு அலுவலகங்கள் இருந்தாலும் அடுத்த நாள் பொங்கல் பண்டிகை என்பதால் மதியத்திற்கு மேல் எந்த அலுவலகமும் செயல்படாது. இதனால் தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவித்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

முருகன்
ஜன 08, 2025 07:28

கை நிறைய சம்பளம் இதர சேவைகள் அது இல்லாமல் ஒரு வருடத்தில் எத்தனை போனஸ் மக்கள் வரிப்பணம் விரயம் ஆகிறது


veera
ஜன 08, 2025 10:34

அதுல பேனா சிலை வேற தண்ட செலவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை