உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தனிநபர் வருவாய் அதிகம் என கூறுகிறீர்கள்; வறுமைக்கோட்டுக்கு கீழ் 75% பேர் உள்ளனரா?

தனிநபர் வருவாய் அதிகம் என கூறுகிறீர்கள்; வறுமைக்கோட்டுக்கு கீழ் 75% பேர் உள்ளனரா?

புதுடில்லி: 'மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கேட்டால், தனிநபர் வருவாய் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் மானியம் பெறுவதற்காக, வறுமை கோட்டுக்கு கீழ் 75 சதவீதம் பேர் உள்ளதாக கணக்கு காட்டுகின்றனர். ரேஷன் கார்டுகள் வினியோகத்தில் மாநில அரசுகள் தாராளமாக நடந்து கொள்வது ஏன்?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கொரோனா தொற்று பரவல் காலத்தின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலைமை குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது.

விசாரணை

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்படி, 2021ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விஷயத்தில் பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்ய காந்த், கோட்டீஸ்வர் சிங் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் கூறியதாவது:பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஒரு சிலரிடம் அதிகளவில் சொத்துக்கள் உள்ளன. அதே நேரத்தில் ஏழைகள், ஏழைகளாகவே உள்ளனர். மாநிலத்தின் மொத்த வருவாயின் சராசரியே, தனிநபர் வருவாயாக காட்டப்படுகிறது. அதனால்தான், அது அதிகமாக உள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை, 8 கோடியாக உள்ளது. கடந்த, 2021ம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை. அதனால், இந்த சலுகைகளை பெற வேண்டிய 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு அவை கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அமர்வு கூறியுள்ளதாவது:

இத்தனை கோடி பேருக்கு ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்கள் கூறுகின்றன. வளர்ச்சி தொடர்பான புள்ளிவிபரங்களை அளிக்கும்போது, மாநிலத்தின் சராசரி தனிநபர் வருவாய் அதிகமாக உள்ளதாக மாநிலங்கள் கூறுகின்றன.

கவலை

அதே நேரத்தில், மானியம் பெறுவதற்கான புள்ளி விபரங்கள் அளிக்கும்போது, 75 சதவீத மக்கள், பி.பி.எல்., எனப்படும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக கூறுகின்றன.இந்த இரண்டையும் எப்படி ஒப்பிட்டு பார்க்க முடியும்? இவை முரணாக உள்ளன. உண்மையான பயனாளிகளுக்குத்தான் அரசின் மானியங்கள் கிடைக்கின்றனவா அல்லது நடுவில் யாருடைய பாக்கெட்டுக்காவது போய் விடுகிறதா என்பதே எங்களுடைய கவலை.மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பத்தி, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 81.35 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதாக கூறியுள்ளார்.

நடைமுறை

இதைத் தவிர வேறு சில திட்டங்களில், 11 கோடி பேருக்கு ரேஷன் இலவசமாக வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.மத்திய அரசு செயல்படுத்தும் இந்த திட்டங்களை, அந்தந்த மாநிலங்கள் நடைமுறைபடுத்தி வருகின்றன. மத்திய அரசின் மானியம் பெறுவதற்காக, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை தாராளமாக வினியோகித்து வருகின்றனவா?நாங்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுடைய வலி, வேதனையை அறிந்துள்ளோம். அதே நேரத்தில், உண்மையான பயனாளிகளுக்கே, அரசின் நல உதவித் திட்டங்கள் சென்று சேருவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Venkatesan Srinivasan
மார் 25, 2025 11:39

அரசின் நலத்திட்ட உதவிகள் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டம் காரணமாக எல்லா தரப்பு மக்களுக்கும் ரேஷனில் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. ஏனைய பொருட்கள் ரேஷனில் நியாய விலையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. வெளிக் கடைகளில் கொள்ளை விலையில் விற்கப்படும் பொருட்கள் ரேஷனில் மட்டுமே நியாய விலைக்கு வாங்க முடியும். அந்த உரிமை எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவர்களும் மக்களின் ஒரு அங்கம். அவர்களுக்கு நியாய விலையில் பொருட்கள் கிடைப்பதை எவ்வாறு மறுக்க முடியும்? சொல்லப்போனால் அவர்கள் செலுத்தும் வருமான வரியும் அரசாங்கத்தின் வருவாயில் அடக்கம். கார் வைத்திருப்பவர் எல்லாம் பணக்காரர்கள் அல்ல. கார் இல்லாதவர்கள் எல்லாம் ஏழையும் அல்ல. அவரவர் வருமான வசதி விருப்பங்கள் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்கள் வாங்க படுகிறது. உண்மையில் ஒரு மனிதனின் உணவு மற்றும் உறைவிடம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் தன்னை வறியவர் என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏழைகள் என்று கூறப்படும் பெரும்பாலான மக்கள் சரியான திட்டமிடல் இன்றி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும்


Raj S
மார் 27, 2025 00:45

உங்களுக்கு கொஞ்சம் புரிதல் வேண்டும்னு நான் நினைக்கறேன்... ரேஷன்ல கொடுக்கறது மானிய பொருட்கள், அதாவது மத்திய மாநில அரசு கிடையாது அரசு காசு குடுத்து குறைந்த விலையில் ஏழைகளுக்கு கொடுக்கறாங்க... நிறைய பேருக்கு குடுத்தா நிறைய காசு மத்திய அரசுக்கு வேணும், அது நம்ம தலைல வரியா தான் வந்து விழும்...


அப்புசாமி
மார் 20, 2025 18:43

ஆளுக்கு பாஞ்சி லட்சம் போட்டு பணக்காரர்களாக்கினோம் யுவர் ஆனர். எல்லாத்தையும் செலவழிச்சு மறுபடியும் ஏழைகளாயிட்டாங்க யுவர் ஆனர். இவிங்களை திருத்தவே முடியாது யுவர் ஆனர்.


Saravanaperumal Thiruvadi
மார் 20, 2025 13:19

தனி நபர் வருவாய் உயர்வு ஆனால் இந்திய பொருளாதாரத்தில் அரசை சாராமல் வாழ தேவையான அளவு உயர்ந்துள்ளதா என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்


ஆரூர் ரங்
மார் 20, 2025 11:26

பென்ஸ் காரில் வந்து விலையில்லா கலைஞர் டிவி வாங்கிச் சென்ற ஆட்களும் உண்டு.. முதியோர் பென்ஷன் மற்றும் ,மகளிர் உதவித் தொகை வாங்கும் பலர் அரசு ஊழியர் குடும்பமே என்கிறார்கள்.


முருகன்
மார் 20, 2025 21:32

அரசு இலவசங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசை குறை கூறுவது மட்டும் ஏன் ஓட்டு அரசியல் நடக்கும் வரை இங்கு எதுவும் மாறாது


லலித்குமார்
மார் 20, 2025 09:09

புரிஞ்சு போச்சா... குமாரு. உனக்கும் கணக்கு வழக்குகள் புரிஞ்சு போச்சா? சீக்கிரம் விடிஞ்சிரும்.


अप्पावी
மார் 20, 2025 07:53

81 கோடி பேருக்கு ரேசன் குடுக்கிறோம். ஏழைகளின் வலி எங்களுக்கு புரியுது. நாமதான் வல்லரசு


கண்ணன்
மார் 20, 2025 12:04

அன்புள்ள படிப்பறவற்வரே, மாநிலங்கள் தரும் தரவுகளின் அடிப்படையிலேயே மத்திய அரசு நியாயவிலைக் கடைகளுக்குப் பொருட்களை வழங்குகிறது நன்றாகப் படித்திருப்பின் இப்படி உளறிக் கொட்ட மாட்டீர்கள்


Varadarajan Nagarajan
மார் 20, 2025 07:13

நீதிமன்றத்தின் கவலை மிகவும் நியாயமானது. உண்மையான பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்களுக்கு இதுபோன்ற நலத்திட்டங்கள்மூலம் மக்கள் வரிப்பணத்தில் உதவிசெய்வது அவசியம். ஆனால் வாக்கு வங்கிக்காக ரேஷன் கார்டுகளை எந்தவித விசாரணையும் இல்லாமல் தாராளமாக வழங்கியுள்ளனர். ரேஷன் கடைகளுக்கு டொயோட்டா இன்னோவா ஏசி காரில் வந்திறங்கி கைரேகையை வைத்துவிட்டு மீண்டும் காரில் அமர்ந்துகொண்டு அந்த கார் ஓட்டுநர் ரேஷன் பொருட்களை எடுத்துச்செல்வதை பல இடங்களில் காணமுடிகின்றது. மத்திய அரசின் மானியத்தில் திட்டங்கள் என்றால் மாநில அரசுகள் தாராளம் காட்டுவதுமட்டுமல்லாமல் ஊழலும் செய்கின்றது. ஆனால் மாநிலம் செயல்படுத்தும் ரூபாய் 2000 மகளிர் உரிமைத்தொகை என்றால், தகுதியான பயனாளர்கள் என செயல்படுத்துகின்றனர். மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டம், விவசாயிகளுக்கான மான்யம், பிரதான சாலை திட்டம், பிரதான மந்த்ரி கான்க்ரீட் வீடுகட்டும் திட்டம் என மத்திய அரசின் பல திட்டங்களிலும் வருமான வரி செலுத்துவூரும் பயனாளிகளாகவுள்ளனர்.


Kanns
மார் 20, 2025 06:39

Courts Must Act ProActively for Supreme People But 95% Dont Act Properly to Protect them. Abolish said 95% Courts. ModiBJP also CHEATS People& Nation. PowerMisusing DICTATOR MODI& Co, Stooge Bureaucrats-Officials NOT PROVIDED LIVELIHOODS only Minm WageJobs from President to Labourer EVEN DESTROYED PEOPLES OWN LIVELIHOOD Illegally Gave ModiMental AADHAR-SpyMaster for Regularising Billions of ForeignInfiltrators& Illegally Giving All BasicCitizenServices incl 90%Unwanted Freebies etc While Denying to Native Citizens With WIDE-SPREAD POWERMISUSES by RulingParties, Stooge-Vested Officials esp CaseHungry Investigators-POLICE-Judges PowerHungry BUREAUCRATS& Groups NewsHungry BiasedMEDIA VoteHungry PARTIES &Vested FALSE-COMPLAINT GANGS Groups/Unions, Women, SCs, advocates etc. UNPUNISHED by COURTJUDGES. SHAMEFUL MALGOVERNANCE, INJUSTICE& BANANA REPUBLIC


Rajarajan
மார் 20, 2025 06:08

பஞ்சம் இல்லாத, பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ள நாட்டில், அரசு ஊழியருக்கு மட்டும் பஞ்சபடி ஏன் ?? இதே பஞ்சம் தனியாருக்கு இல்லையா ?? இதனாலும் அவ்வப்போது விலைவாசி யார்கிறது. இதையும் சேர்த்து கேளுங்கள் யுவர் ஹானர் ப்ளீஸ்.


SRINIVASARAGHAVAN.S
மார் 20, 2025 10:56

மிகச் சரியான கேள்வி. அரசு ஊழியர்கள் மட்டும்தான் நாட்டின் செல்லப் பிள்ளைகளா? அவ்வப்போது அதிகரிக்கப்படும் மாதாந்திர பென்ஷன், சூப்பர் சீனியர் என்ற பெயரில் இன்னமும் அதிக பென்ஷன். அவர்கள் காலத்திற்குப் பின்னரும், வாழ்க்கைத் துணைக்கு பென்ஷன் ஆனால் தனியார் துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ஃபேமிலி பென்ஷன் என்ற மிகச் சிறு தொகை. இத்தொகை எக்காலத்திலும் அதிகரிக்காது. ப்ராவிடன்ட் ஃபண்ட் தொகையை டெபாசிட் செய்தால், வருஷா வருஷம் வட்டி சதவிகிதம் குறைகிறது. கொரோனா காலம் முதல் அதிகமாக ஏற ஆரம்பித்த விலைவாசி. தனியார் ஓய்வூதியர்களின் வாழ்க்கையே கொடுமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை