உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுவர் இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க காங்., கோரிக்கை

சுவர் இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க காங்., கோரிக்கை

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் பொதுப்பணித் துறை மூலம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பள்ளம் தோண்டும் போது சுவர் இடிந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காங்., மாநில செய்தித் தொடர்பாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: லாஸ்பேட்டையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட பெண் கூலித் தொழிலாளி, சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். பொதுப் பணித் துறையின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம். வேலை நடந்த இடத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. அபாயகரமான இடத்தில் தொழிலாளர்களை ஈடுபடுத்தும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். அங்கு, பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டியிருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம். எனவே உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி