உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டாக் கலந்தாய்வை விரைவுபடுத்த பா.ம.க., நிர்வாகக்குழு தீர்மானம்

சென்டாக் கலந்தாய்வை விரைவுபடுத்த பா.ம.க., நிர்வாகக்குழு தீர்மானம்

புதுச்சேரி : போர்க்கால அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என பா.ம.க., நிர்வாக குழு வலியுறுத்தி உள்ளது. புதுச்சேரி மாநில பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம் அரியாங்குப்பத்தில் நடந்தது. செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். ஆலோசகர் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சுப்ரமணியன், செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சென்டாக் கலந்தாய்வு தாமதமாக நடத்தப்படுவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர்.

பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கும் கடைசி நாள் வரை மாணவர் சேர்க்கை நடப்பதால், பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள் ளது. எனவே தற்போதுள்ள விண்ணப்பங்களை வைத்து போர்க்கால அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வை நடத்த வேண்டும். ஏற்கனவே முதியோர் உதவித் தொகை பெற்று தற்போது நீக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் பேருக்கு மீண்டும் உதவித் தொகை வழங்க வேண்டும். ஏழை மக்களுக்கு 7 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில துணை செயலாளர்கள் செல்வராசு, செயபால், பெருமாள், வடிவேல், ரவி, தட்சிணாமூர்த்தி, பாண்டியராஜன், மீனவர் அணி செயலாளர் ருத்ராடம், மகளிர் அணி தலைவர் வீரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ