உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்துறை காலி பணியிடம்: நிரப்ப முதல்வருக்கு கோரிக்கை

மின்துறை காலி பணியிடம்: நிரப்ப முதல்வருக்கு கோரிக்கை

புதுச்சேரி: மின்துறையில் காலியாக உள்ள கட்டுமான உதவியாளர்கள் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மின்துறையில் கடந்த பிப்ரவரியில், கட்டுமான உதவியாளர் பணிக்கு தகுதி பட்டியல் மற்றும் முன்பதிவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தகுதி பட்டியலில் இருந்த நபர்கள் பணி உத்தரவின்படி கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி கட்டுமான உதவியாளர் பணியில் சேர்க்கப்பட்டனர். இதில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 16 பேரில் 13 பேர் மட்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். எஞ்சிய 3 பேரில் இருவர் குடிபெயர்ந்தோர் என்றும், ஒருவர் வேறு பணிக்கு சென்றுவிட்டதால், மூன்று இடம் காலியாக உள்ளது. இந்த காலியிடத்தில் முன்பதிவு பட்டியலில் உள்ள தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து தகுதியான நபர்களை நியமிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி