உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேளாண்துறை சார்பில் மண்வள முகாம் துவக்கம்

வேளாண்துறை சார்பில் மண்வள முகாம் துவக்கம்

புதுச்சேரி : அரசு வேளாண் துறை சார்பில் நடத்தப்படும் மண்வள முகாம் இன்று துவங்குகிறது.வேளாண்துறை கூடுதல் இயக்குனர் ரவிப்பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) சார்பில் பல்வேறு கிராமங்களில் மண்வள முகாம் இன்று 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. மண் பரிசோதனை மூலம் மண் வளம் காப்பதன் பயன்கள் குறித்து முகாமில் விளக்கம் அளிக்கப்படுகிறது. ரசாயன உரங்கள், தேவைக்கு அதிகமாக உபயோகிப்பதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மண் பரிசோதனை அவசியமாகும். பயிர் அறுவடைக்குப்பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். மேலும், மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணங்களால் மண் வளம் குன்றி விடும். எனவே மண் பரிசோதனை மூலம் மண் வளத்தை அறிந்து கொள்வது அவசியமாகும்.மண் வளம் குறித்த முகாம் இன்று (13ம் தேதி) இருளஞ்சந்தை, சோரப்பட்டு கிராமத்திலும், நாளை (14ம் தேதி) மணவெளி, கரையாம்புத்தூரிலும் நடக்கிறது.15ம் தேதி ஒதியம்பட்டு, மதகடிப்பட்டு பாளையத்திலும், 18ம் தேதி கணபதிசெட்டிக்குளம், காட்டேரிக்குப்பத்திலும், 19ம் தேதி மங்கலம், கரிக்கலாம்பாக்கத்திலும் நடக்கிறது. 20ம் தேதி கூனிச்சம்பட்டு, டி.என்.பாளையம் கிராமத்திலும், 21ம் தேதி மடுகரை, மணப்பட்டு, தொண்டமாநத்தம் ஆகிய கிராமங்களில் நடக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை