உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு போட்டி பரிசளிப்பு

விளையாட்டு போட்டி பரிசளிப்பு

புதுச்சேரி : சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. ஆசிரியர் மகாலிங்கம் வரவேற்றார். தலைமையாசிரியர் சிவராஜலிங்கம் தலைமை தாங்கினார். முதன்மைக் கல்வி அதிகாரி அனுமந்தன் சிறப்புரையாற் றினர். பள்ளி முன்னாள் தலைமையாசிரியர்கள் கோதண்டபாணி, ரூபாவதி, கிராமக் கல்விக்குழுத் தலைவர் சுப்ரமணி, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கோவிந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளியில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் நாரா யணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை