உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணம் திருட்டு: போலீசில் புகார்

பணம் திருட்டு: போலீசில் புகார்

புதுச்சேரி : சந்தைக்கு வந்திருந்தவரிடம் பணத்தைத் திருடிச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா வீரசோழபுரத்தில் வசிப்பவர் விஜயகுமார், 35. இவர் நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு வாரச்சந்தைக்கு வந்துள்ளார். பிற்பகல் 2 மணிக்கு அங்குள்ள சாராயக்கடைக்கு பின்புறமுள்ள பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் கால் கழுவ, பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்டிருந்த 9500 பணத்தை கரையோரம் வைத்துவிட்டு உள்ளே இறங்கியுள்ளார். இதை கவனித்த அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர், பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஆசாமியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை