உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

புதுச்சேரி: மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி செட்டிக்குளம் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனிடம் மனு அளித்தனர்.புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினம் சாலை, ராதாகிருஷ்ணன் நகர் செட்டிகுளம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ரகு (எ) ரகுநாதன், என்பவர் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் நேற்று மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், 'நீங்கள் எங்கள் பகுதியில் நேரில் ஆய்வு செய்து எங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். எங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவில்லை என்றால் எங்களுடைய அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. மனுவை பெறுக்கொண்ட அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி