மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிகள் ஆரோவில்லில் குவிந்தனர்
17-Aug-2024
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சைக்கிளில் சென்று புதுச்சேரியை சுற்றி பார்க்க இலவச 'சைக்கிள் சேவை'யை அலையான்ஸ் பிரான்ஸ்சிஸ் பிரெஞ்ச் கல்வி நிறுவனம் துவங்கி உள்ளது.புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புதுச்சேரியின் புகழ் பெற்ற சுற்றுலா தளமான ஒயிட் டவுன், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், மியூசியம், பிரெஞ்சு ஆலயம், சட்டசபை, கவர்னர் மாளிகை, பாரதி பூங்கா, கடற்கரை பகுதி என அனைத்துமே இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவிலேயே அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் எப்பொழுதுமே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.தற்போது இந்த பகுதிகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் தங்கள் கல்வி நிறுவன மாணவர்கள் சைக்கிளில் சென்று பார்வையிடுவதற்கு வசதியாக புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையான்ஸ் பிரான்ஸ்சிஸ் பிரெஞ்ச் கல்வி நிறுவனம் இலவச 'சைக்கிள் சேவை'யை துவக்கி உள்ளது. அதை யொட்டி இரண்டு புது சைக்கிள்கள் பிரெஞ்ச் கல்வி நிறுவன வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் கல்வி நிறுவனத்தில் உள்ள ஊழியரிடம் தங்களது ஆவணம் மற்றும் குறைந்தபட்ச ஒரு தொகையை டிபாசிட்டாக கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துச் செல்லலாம். காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை சைக்கிளை பயன்படுத்தலாம். சைக்கிளை மீண்டும் விடும் போது தாங்கள் கொடுத்த டிபாசிட் தொகை, ஆவணம், ஆகியவை திரும்ப தரப்படும். இதனால் சுற்றுலாப் பயணிகள் பயனடைவர் என கல்வி நிறுவன ஊழியர்கள் கூறினர்.
17-Aug-2024