மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
10 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
10 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில், தொடர்ந்து வெயில் அதிகரித்து வரும் நிலையில், நேற்று, 102.6 டிகிரி ஆக பதிவானது. புதுச்சேரியில் கடந்த பிப்., மாதத்தில் இருந்து வெயில் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. மார்ச், ஏப்ரல் மாதங்களில், 100 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த வாரம், புதுச்சேரியில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வெயில் தாக்கம் சற்று குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால், கடந்த சில தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 101.1 டிகிரி வெப்பநிலை பதிவானது. கத்தரி வெயில் முடிவுக்கு வந்த பின்னர், படிப்படியாக வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று, வெயில் அதிகரித்து, வெப்பநிலை, 102.6 டிகிரியாக பதிவானது. இதனால், பொதுமக்கள் சாலையில் செல்ல மீண்டும் அச்சப்படும் சூழல் உருவாகி உள்ளது.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago