உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 104 டிகிரி வெயில்

புதுச்சேரியில் 104 டிகிரி வெயில்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று வெயிலின் அளவு அதிகபட்சமாக 104 டிகிரி பதிவாகின. நடப்பாண்டில், புதுச்சேரியில் 12-வது முறையாக வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பகல் நேரத்தில் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர். மதிய வேளையில் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி பல இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது. கடும் வெயிலால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை