உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தங்கத்தை கேட்டு பெண் குருவிக்கு மிரட்டல் காரைக்காலை சேர்ந்த 11 பேருக்கு வலை

தங்கத்தை கேட்டு பெண் குருவிக்கு மிரட்டல் காரைக்காலை சேர்ந்த 11 பேருக்கு வலை

காரைக்கால்:' வெளி நாட்டிலிருந்து 15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கொண்டு வந்த பெண் குருவியை மிரட்டிய 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.காரைக்கால், புதுத்துறை, சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த கியாசுதீன் மகள் முகமது ஷர்மிளா, 29. இவரது தாய், சித்தி ஜெரினா பேகம். இவர் வெளிநாட்டில் இருந்து தங்க நகை மற்றும் பொருட்களை எடுத்து வந்து உரியவர்களிடம் கொடுக்கும் குருவியாக செயல்பட்டு வருகிறார்.இதற்கு கமிஷன் பெற்று வந்தார். கடந்த 3ம் தேதி புகாரி என்பவர் முகமது ஷர்மிளாவை தொடர்பு கொண்டு இலங்கை செல்ல, திருச்சி விமான நிலையத்திற்கு வரும்படி தெரிவித்துள்ளார். அதன்படி, அவர், திருச்சி சென்றார் பின், அங்கிருந்து மூன்று நபர்களுடன் முகமது ஷர்மிளா கொழும்பு விமான நிலையத்திற்கு சென்றார். கடந்த 5ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு செல்லுவதற்கு முன், ஒருவர் சிறு, சிறு உருண்டையாக 15 லட்சம் ரூபாய் மதிப்பில் 200 கிராம் தங்கம் கொடுத்து, இதை சென்னையில் உள்ள நபரிடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார்.தங்கத்தை பெற்ற முகமது ஷர்மிளா சென்னை விமான நிலையத்தில் இறங்கும் போது அதிகாரிகள் சோதனை செய்ததால் விமான நிலை கழிவறைக்கு சென்று அவரிடம் இருந்த தங்கத்தை கழிவறையில் போட்டு விட்டு வந்து விட்டதாக கூறியுள்ளார்.இதை நம்பாமல் தங்கம் கடத்தலில் ஈடுப்பட்ட சிலர், அவரது வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளனர். ராமநாதபுரம் எஸ்.பி.,பட்டினம் பகுதியை சேர்ந்த கலாந்தர் அபாஸ் 35; ஜவாஹீர், 27; அப்துல்ஹீஜ், 32; காரைக்கால் ஹைதர் அலி, இதயத்துல்லா, விடுதலைகனல், அன்சாரி, சாகுல், முருகன், அரவிந்து, அரசவளவன் உள்ளிட்ட 11 பேர் கடந்த 9ம் தேதி முகமது ஷர்மிளா வீட்டுக்கு சென்று தங்கத்தை கேட்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மனமுடைந்த முகமது ஷர்மிளா கம்போர்ட் திரவத்தை குடித்து விட்டு அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுக்குறித்து நகர காவல் நிலையத்தில் முகமது ஷர்மிளா கொடுத்த புகாரின் பேரில், மிரட்டிய 11 பேர் மீது இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !