உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துக்க நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த விபத்தில் 2பேர் காயம்

துக்க நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த விபத்தில் 2பேர் காயம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே துக்க நிகழ்ச்சியின்போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்தனர். திருக்கோவிலுார் அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தில் நேற்று நடந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த டி.வி.எஸ்., சாக்கு பையில் இருந்த பட்டாசு மீது நெருப்புப்பட்டு வெடிக்க தொடங்கியது. இதில் இருசக்கர வாகனம் வெடித்து பெரும் விபத்தானது. இதில், துக்கம் விசாரிக்க வந்திருந்த செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ஏழுமலை, 42; கீழத்தாழனுாரை சேர்ந்த சங்கர் மனைவி செல்வி, 36; இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள், திருக்கோவிலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருக்கோவிலுார் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி