மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு: இருவர் கைது
21-Jun-2026
அரியாங்குப்பம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர். நோணாங்குப்பம், படகு குழாம் அருகில் ஒருவர் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களை ஆபாசமாக பேசுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், நோணாங்குப்பத்தை சேர்ந்த ரகு, 30, என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதேபோல், வீராம்பட்டினம் சாலையில் நின்று கொண்டு பொது மக்களை ஆபாசமாக பேசிய அரியாங்குப்பத்தை சேர்ந்த அரவிந்தன்,57, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
21-Jun-2026