உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி

2 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 14 லட்சம் இழந்துள்ளனர். நைனார்மண்டபத்தை சேர்ந்தவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தபடி பகுதி நேர வேலையாக ஆன்லைன் ேஷர்மார்க்கெட்டில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பிய அவர், மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் ேஷர்மார்க்கெட்டில் பல்வேறு தவணைகளாக ரூ. 13 லட்சத்து 92 ஆயிரம் முதலீடு செய்தார். பின், அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. லாஸ்பேட்வையை சேர்ந்தவரை, மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு, குறைந்த வட்டியில் ரூ. 20 லட்சம் லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதைநம்பி, லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, மர்மநபருக்கு ரூ. 3 ஆயிரத்து 500 செலுத்தியபின், மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுபோல், 2 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 13 லட்சத்து 95 ஆயிரத்து 500 இழந்துள்ளனர். இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை