மேலும் செய்திகள்
ரூ. 24 ஆயிரம் ‘குட்கா’ பறிமுதல்: 3 பேர் கைது
16-Jun-2026
திருக்கனுார்: பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு சாராயக் கடை அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் போதைப் பொருளான குட்கா விற்பதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். விற்பனை செய்வதற்கு கடைகளில் குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பெட்டிக்கடை உரிமையாளர் விழுப்புரம் அடுத்த ராதாபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 33; கூனிச்சம்பட்டை சேர்ந்த ஏகநாதன்,56; வம்புபட்டு பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 47, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 59 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16-Jun-2026