உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது

பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது

திருக்கனுார்: திருக்கனுார் பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்தியதுடன், போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன் தினம் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திருக்கனுார் ஏரிக்கரை சாலையில் பொது இடத்தில் மது அருந்தி கொண்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட தமிழகப் பகுதியான கொடுக்கூரை சேர்ந்த சீனு, 25; சத்திராஜ், 30; சித்தலம்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 21; விக்ரம், 20; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை