உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழிப்பறியில் ஈடுபட காத்திருந்த 4 பேர் கைது தப்பியோடிய 9 பேருக்கு வலை 

வழிப்பறியில் ஈடுபட காத்திருந்த 4 பேர் கைது தப்பியோடிய 9 பேருக்கு வலை 

நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் - பண்ட சோழநல்லுார் வடக்கு வெளி சாலையில் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டி களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு 13 பேர் கொண்ட கும்பல் கத்தியுடன், தனியார் இரும்பு கம்பெனி எதிரில் உள்ள சிவபெருமான் நகரில் பதுங்கி இருப்பதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் மாற்று உடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கூடியிருந்த அந்த கும்பலை ரகசியமாக கண்காணித்து கொண்டிருந்தனர்.அதில் அவர்கள் ஆடம்பர செலவுக்காகவும், வழக்கு செலவுக்காகவும் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் திட்டம் வகுத்ததை அறிந்து போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றனர்.அதில் 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்; 9 பேர் தப்பியோடினர். விசாரணையில், அவர்கள் அரியாங்குப்பம் அந்தோ ணியர் கோவில் வீதியைச் சேர்ந்த ஜான் டேனியல், 27; பாரதி நகர் சதீஷ்குமார், 27; அருந்ததிபுரம் சுதர்சன் 27; வில்லியனுார் பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த தமிழ்செல்வன் 26 ஆகியோர் என்பதும், நான்கு பேர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. மேலும், அரியாங்குப்பத்தில் நடந்த பாண்டியன் கொலை வழக்கில் சிக்கியுள்ள நால்வரும், வழக்கு விசாரணைக்கு பணம் தேவைப்பட்டதால் கூட்டு கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு காத்திருந்தது தெரிந்தது.நால்வரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தப்பி யோடிய 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ