உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி உயில் தயாரித்து நிலம் அபகரிப்பு மாஜி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது

போலி உயில் தயாரித்து நிலம் அபகரிப்பு மாஜி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது

புதுச்சேரி: போலி உயில் தயாரித்து நிலம் அபகரித்த வழக்கில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர், பத்திர எழுத்தர் உட்பட 4 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, பத்திரப்பதிவு துறையில் ஏராளமான உயில்கள் திருத்தி போலி பத்திரம் தயாரித்து மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அதனையொட்டி, அப்போதைய சப் கலெக்டர் கந்தசாமி உத்தரவின் பேரில் அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களில் உள்ள உயில்களை மறு ஆய்வு செய்யப்பட்டது.அதில், உழவர்கரை சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மட்டும் கடந்த 1980 முதல் 2001ம் ஆண்டு வரை பதிவான பல உயில்கள் திருத்தி போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து உழவர்கரை சப்ரிஜிஸ்டர் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த டிசம்பர் 8ம் தேதி உயிலில் கைரேகை மற்றும் கையொப்பம் புத்தகத்தில் திருத்தம் செய்து போலி பத்திரம் தயாரித்து மோசடி நடந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.முதல் உயிலை ஆய்வு செய்ததில், சாரம் கவிக்குயில் நகரில் 3,600 சதுரடி நிலத்திற்கு, கோட்டக்குப்பம் சமீத் நத்வி, கடலுார், மஞ்சக்குப்பம் சித்ரா என்பவருக்கு உயில் எழுதி வைத்திருப்பதாக போலியான ஆவணம் தயாரித்து அதன் மூலம் வேறு நபர்களுக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. சென்னையில் வசித்து வரும் சித்ராவை கடந்த 7ம் தேதி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.போலி உயில் தயாரித்த புதுச்சேரி நுாறடிச்சாலை ராகவேந்திரா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை எம்.டி.எஸ்., ஊழியர் ரவிச்சந்திரன்,61; என்பவரையும், இதற்கு உதவிய புரோக்கர்கள் லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர் விரிவாக்கம், அன்னை நகர் 2வது குறுக்கு தெரு சித்தானந்தம், 48; பட்டானுார், ஸ்ரீராம் நகர், புது நகர் மஞ்சினி, 59; பத்திர எழுத்தர் தேங்காய்த்திட்டு அருட்பெருஞ்ஜோதி நகர் மணிகண்டன்,48; ஆகியோரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ