4 ஜி சேவை; பி.எஸ்.என்.எல்., அழைப்பு
புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாடு முழுதும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன் கோபுரங்கள் அமைத்து, 4 'ஜி'யாக மாற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இந்தாண்டு அக்டோபர் மாத இறுதிக்குள், அனைத்து மொபைல்போன் கோபுரங்களையும், 4ஜி சேவையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதில் பாதிக்கும் மேலான மொபைல் போன் கோபுரங்கள், 4ஜி சேவையை தற்போது வழங்கி வருகின்றன. வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள, பழைய 2ஜி, 3ஜி, சிம் கார்டுகளை மாற்றி, 4ஜி, சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.தங்களது சிம்கார்டு விபரங்களை 9442824365, என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். இந்த சலுகை குறுகிய காலம் வரை மட்டுமே உள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் வாடிக்கையாளர் சேவை மையம் (புதுச்சேரி, வில்லியனுார், மேட்டுப்பாளையம்) மற்றும் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் மையங்களை அணுகலாம்.மேலும் மேளா நடைபெறும் மேட்டுப் பாளையம், வில்லியனுார், சேதராபட்டு, ஏம்பலம் சந்திப்பு, அரும்பார்த்தபுரம், கரியமாணிக்கம் சந்திப்பு, தவளக்குப்பம், முதலியார்பேட்டை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிய, 4ஜி, சிம்கார்டை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.இதனுடன், 4 ஜி.பி., இலவச டேட்டாவையும், பெற்றுக் கொள்ளலாம். புதுச்சேரி, வில்லியனுார், மேட்டுப்பாளையம் வாடிக்கையாளர் சேவை மையங்கள், ஞாயிறு அன்றும் இயங்கும்'என, தெரிவிக்கப்பட்டுள்ளது.