உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கிய 6 பேர் கைது

கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கிய 6 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆரில் கொள்ளை அடிக்க கத்தியுடன் பதுங்கியிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, இ.சி.ஆர். லதா ஸ்டீல் அருகே ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் இரவு தன்வந்தரி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் சோதனை செய்தனர். போலீசாரை கண்ட அந்த கும்பல் தப்பி செல்ல முயன்றது. அவர்களை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அவர்கள் கத்திகள், கஞ்சா,  முகமூடிகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். சண்முகாபுரம் செல்வம் மகன் நிஷாந்த், 27; பாட்ஷா மகன் அமீர், 27; கதிர்காமம் அக்பர் மகன் நவுஷாத், 29; செல்வம் மகன் சிவசேகர், 24; தர்மபுரி பச்சையப்பன் மகன் அறிவரசன், 26; பாக்கமுடையான்பேட் சுபாஷ் மகன் ஆனந்த், 21, ஆகியோர் என, தெரியவந்தது. அவர்கள் இ.சி.ஆர்., வழியாக காரில் செல்லும் தொழிலதிபர்கள், வணிகர்களை வழிமறித்து, முகமூடி அணிந்து, கத்தியால் தாக்கி கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர்.  இதையடுத்து, 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான 350 கிராம் கஞ்சா, 4 கத்திகள், 6 முகமூடிகள், 6 மொபைல்களை பறிமுதல் செய்தனர்.  கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட  பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 6 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி