உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 6 பேரிடம் ரூ. 3.43 லட்சம் அபேஸ்

6 பேரிடம் ரூ. 3.43 லட்சம் அபேஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம் 3.43 லட்சம் ரூபாய் மோசடி செய்த, கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். முதலியார்பேட்டையை சேர்ந்தவர் ஜான். இவர் ஓ.எல்.எக்ஸ்., மூலம் பொருட்கள் வாங்குவது தொடர்பாக ஒரு நபரிடம் பேசினார். பொருட்கள் வாங்க ஆன்லைன் மூலம் 22 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.ஆச்சாரியபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது வங்கி கணக்கில் இருந்து 28 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால், வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறியதை நம்பி, புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணபாரதி, 1.30 லட்சம், செல்வா, 28 ஆயிரம், ஞானசிவம், 35 ஆயிரம் அனுப்பி ஏமாந்தனர்.லாஸ்பேட்டையை சேர்ந்த அஜய்வெங்கடேஷின் கிரெடிட் கார்டில் இருந்து 1 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி