உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழகத்தில் 2026ல் தி.மு.க., -அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி: அன்புமணி ஆருடம்

தமிழகத்தில் 2026ல் தி.மு.க., -அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி: அன்புமணி ஆருடம்

சிதம்பரம், : எந்த கூட்டணியில் இருந்தாலும் இட ஒதுக்கீட்டு கொள்கையை விட்டுத் தராமாட்டோம் என பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.சிதம்பரத்தில் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:தமிழகத்தில் பா.ம.க., இல்லை என்றால், இரு திராவிட கட்சிகளும், இயற்கை வளத்தை அழித்து, நாசமாக்கி இருப்பார்கள். வீராணத்தை சுற்றியுள்ள பகுதி பாலைவனமாக மாறியிருக்கும்.தற்போதுள்ள எம்.பி., திருமாவளவன், தொகுதிக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., இல்லாத, கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும். 57 ஆண்டு, திராவிட ஆட்சியில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர். மது பழக்கத்திற்கு அனைவரையும் அடிமையாக்கியதுதான் திராவிட கட்சிகளின் சாதனை. தற்போது, போதை பொருட்களை, பள்ளி மாணவர்கள், பயன்படுத்தி சீரழிந்து வருகின்றனர்.நமது கூட்டணி பூவும், பழமும் இணைந்துள்ளது. அடங்க மறு, அத்துமீறு என்பதல்ல நமது அரசியல். நாம் நடத்துவது டீசன்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ். அதற்காகத்தான் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.இட ஒதுக்கீட்டை கொடுத்ததாக தி.மு.க., வினர் கூறி வருகின்றனர். , இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காந்தி. கையெழுத்து போட்டது மவுன்பேட்டன் பிரபு. அதுபோல் தான், இட ஒதுக்கீடு வாங்கி தந்தவர் ராமதாஸ். கையெழுத்து போட்டவர் கருணாநிதி, அவ்வளவுதான். பா.ம.க., எந்த கூட்டணியில் இருந்தாலும் இட ஒதுக்கீட்டு கொள்கையை விட்டுத் தர மாட்டோம்.இரு திராவிட கட்சிகளும், எங்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டாம். 2026ல் நாங்கள் ஆட்சிக்கு வந்து, கையெழுத்து போட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ