உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெளிமாநில சுற்றுலா வாகனமா? புதுச்சேரி போலீசார் குஷி

வெளிமாநில சுற்றுலா வாகனமா? புதுச்சேரி போலீசார் குஷி

புதுச்சேரியின் மாநில வருவாய் சுற்றுலா துறையை நம்பி உள்ளது. வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்தால் தான் வியாபாரம் அதிகரிக்கும். தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்ட், மதுபான விற்பனை அனைத்தும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளது. தற்போது கோடை விடுமுறையொட்டி, புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அப்படி வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.முருகா தியேட்டர் சிக்னலில் நிற்கும் போக்குவரத்து போலீசார், சிக்னலை கடக்க வரும் தமிழகம், கேரளா, கர்நாடகா கார்களை உடனே நிறுத்தி விடுகின்றனர். அவர்களிடம், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் ஆவணங்களை கேட்கின்றனர். அனைத்தும் இருந்தால் கூட, ஏன் சீட் பெல்ட் போடவில்லை. காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.அதேபோன்று, கடலுார் சாலையில் முள்ளோடையில், வாகன சோதனை என்ற பெயரில் புதுச்சேரி போலீசார் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டும் நிறுத்தி சோதனையிடுவது, அபராதம் விதித்தும் வருகின்றனர்.போக்குவரத்து சட்டப்படி விதிமீறலில் ஈடு்படுவோர் மீது அபராதம் விதிப்பது தவறில்லை. ஆனால், வெளி மாநில வாகனங்களை மட்டும் பிடித்து, அபராதம் விதிப்பதும், அவர்களை விரட்டுவதும், புதுச்சேரி மாநில ஆட்சியாளர்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்தும். சுற்றுலா பயணிகளின் வருகையும் குறையும். எனவே, போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Selvaraj Raj
மே 01, 2024 04:26

புதுச்சேரியில் காவலர்கள் சிஃனல்களில் இருப்பதில்லை இருந்தாலும் ஓரமாக நின்றுகொண்டு மக்கள் படும் திண்டாட்டத்தை வேடிக்கை பார்க்கின்றனர் ஆனால் வசூல் செய்வதில் ஒரே இடத்தில எட்டு காவலர்கள் வேலை நடக்கிறது


Karna
ஏப் 29, 2024 10:38

புதுச்சேரி போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து பணிகளை பார்க்கின்றனரோ இல்லையோ மாலை 6 மணிக்கு மேல் அபராதம் பறிக்கும் பணியை அழகாக பார்க்கின்றனர்


Satish Chandran
ஏப் 28, 2024 18:26

சன் ஸ்கிரீன் போடுவது பற்றி அரசு தெளிவாகக் கூற வேண்டும் வெயிலுக்கு % அளவு கருமை ஸ்கிரீன் போடலாம் என கார் நிறுவனங்கள் சொல்கின்றன எது உண்மை?


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி