உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டை கல்லுாரியில்  மாணவர் சேர்க்கை நாளை துவக்கம்

லாஸ்பேட்டை கல்லுாரியில்  மாணவர் சேர்க்கை நாளை துவக்கம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை பெண்கள் பொறியியல் கல்லுாரியில் 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நாளை 16ம் தேதி காலை 9.00 மணிக்கு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் ராணி தலைமை தாங்குகிறார். சென்னை டாடா கன்சல்டன்சி மென்பொருள் விநியோகத் தலைவர் சுமதி துவக்க உரையாற்ற உள்ளார். பெருநிறுவன சமூக பொறுப்புத் தலைவர் மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு திட்டத்தின் தலைவர், ஓசைலைன், புதுச்சேரி இன்டகிரா சாப்ட்வேர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மனித வளத்துறைத் தலைவர் கவிதா ஜெய்சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இக்கல்லுாரியில் கணினி அறிவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை , கட்டடக்கலை உதவியாளர் துறை, தகவல் மற்றும் அறிவியல் துறை ஆகிய 4 ஆண்டு பொறியியல் படிப்புகளும். மூன்று மற்றும் நான்கு ஆண்டு ஹானர்ஸ் பட்டப்படிப்பு, பி.காம்., வணிகவியல் பொது பட்டயப்படிப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி