| ADDED : ஏப் 27, 2024 04:24 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை துவங்க நடவடிக்கை எடுத்த விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அருண் சர்மா தொண்டு நிறுவன தலைவர் வீரராகு நன்றி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. அந்த விமான சேவை கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்தப் பட்டது. இதனால் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற் றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.எனவே, புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுக்கும், இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் பகுதிகளுக்கு மீண்டும் விமான சேவை துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தனியார் நிறுவனம் இந்த சேவையை வரும் ஜூலை 1ம் தேதி முதல் துவங்க உள்ளது.மேலும், பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமான சேவையையும், அந்த நிறுவனம் துவங்க இருக்கிறது. இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன், வியாபார பிரமுகர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடர நடவடிக்கை எடுத்த இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் புதுச் சேரி அரசுக்கு நன்றி. மேலும், சாதாரண மக்களும் விமானங்களில் பயணிக்க பல்வேறு சிறப்பு சலுகைகளை அளிக்க தனியார் விமான நிறுவனமும், மத்திய, மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.